3
July, 2026

A News 365Times Venture

3
Friday
July, 2026

A News 365Times Venture

`ஆதவ் அர்ஜுனாவைக் கைதுசெய்வார்களா? இது சர்வாதிகாரத்தின் உச்சம்' – ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

Date:

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

அவரது கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?

அனிதா ராதாகிருஷ்ணன்

சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்! ஆணவம் அழிவிற்கு வழி” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

“அனிதா ராதாகிருஷ்ணனைக் கைதுசெய்தது தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. ஜெயலலிதா காலத்தில் என் மீது 16 அவதூறு வழக்குகள் போட்டும்கூட என்னைக் கைது செய்யவில்லை. ஒருவரை விமர்சித்து பேசியதற்காக கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மு.க.ஸ்டாலின், உதயநிதியை அவதூறாகப் பேசிய ஆதவ் அர்ஜுனாவை கைதுசெய்வார்களா? இந்தக் கைது சர்வாதிகாரத்தின் உச்சம். இதை சட்டரீதியாக சந்திப்போம். அராஜகத்தை முடிவுக்கு கொண்டுவருவோம். திமுக ஆட்சியில் அவதூறு வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Iran : அலி கமேனி இறுதிச்சடங்கு: 4 மாதங்களாக உடல் எங்கே இருந்தது? இஸ்லாமிய விதியை மீறி தாமதமானதா?

உலக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய ஈரானின் முன்னாள் உச்ச தலைவர்...

`தவெக நிதியமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜராக வேண்டும்'- அடிதடி வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில்...

இனி பெட்ரோல், டீசல் விலை ஏறாது; எப்போது குறையும்? – மத்திய அமைச்சர் சொல்லும் 'ஹேப்பி நியூஸ்'

ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெருமளவு நஷ்டத்தைச் சந்தித்தன....

"ஆணவம் அழிவிற்கு வழி!"- திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்...