3
July, 2026

A News 365Times Venture

3
Friday
July, 2026

A News 365Times Venture

"ஆணவம் அழிவிற்கு வழி!"- திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

Date:

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரது கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைதுசெய்துள்ளது ‘Take Diversion’ அரசு.

அனிதா ராதாகிருஷ்ணன்

தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?

சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?

அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?

ஸ்டாலின்
ஸ்டாலின்

வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து – விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.

“ஆணவம் அழிவிற்கு வழி!” என்று தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`ஆதவ் அர்ஜுனாவைக் கைதுசெய்வார்களா? இது சர்வாதிகாரத்தின் உச்சம்' – ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர்...

முதல்வர் விஜய் குறித்து `அவதூறு' பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும்...

செந்தில் பாலாஜியை கைது செய்ய தீவிரம் காட்டும் காவல்துறை? – இதுவரை நடந்தது என்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்ற விஜய் தலைமையிலான தவெக,...

"சந்தேகம் இருந்தால் ஆர்.என் இரவியிடம் கேட்டுப்பாருங்கள்" – ஆளுநரைக் கண்டித்த எம்.பி சு.வெங்கடேசன்

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர...