3
July, 2026

A News 365Times Venture

3
Friday
July, 2026

A News 365Times Venture

முதல்வர் விஜய் குறித்து `அவதூறு' பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!

Date:

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் விஜய்

கடந்த ஜூன் 20, 2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், கடுமையான ஆட்சேபனைக்குரிய வகையிலும் கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, ஆத்தூர் நகரச் செயலாளர் செல்வம் என்பவர் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில், ஆத்தூர் காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அவதூறாகப் பேசுதல், அமைதியைக் குலைத்து மோதலைத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் காவல் துறையினரின் கைது நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி, `மக்கள் பிரதிநிதியாகப் பொறுப்பில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று சுட்டிக்காட்டினார்.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

மேலும், `7 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவி வகித்த ஒரு மூத்த அரசியல்வாதி, ஏன் இது போன்ற தரக்குறைவான வார்த்தைகளைப் பேச வேண்டும்’ எனக் கடுமையான கண்டனம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அவரது முன்ஜாமீன் மனுவை நீதிபதி அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால், அனிதா ராதாகிருஷ்ணன் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவிவந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"ஆணவம் அழிவிற்கு வழி!"- திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்...

செந்தில் பாலாஜியை கைது செய்ய தீவிரம் காட்டும் காவல்துறை? – இதுவரை நடந்தது என்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்ற விஜய் தலைமையிலான தவெக,...

"சந்தேகம் இருந்தால் ஆர்.என் இரவியிடம் கேட்டுப்பாருங்கள்" – ஆளுநரைக் கண்டித்த எம்.பி சு.வெங்கடேசன்

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர...

பென்னாகரம் MLA-வை புறக்கணித்து மாவட்டச் செயலாளர் நடத்திய அரசு நிகழ்ச்சி; தருமபுரி தவெக-வில் பரபரப்பு

புதிய பேருந்து வழித்தட தொடக்கவிழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ-வை அழைக்காமல் மாவட்டச் செயலாளரே...