7
June, 2026

A News 365Times Venture

7
Sunday
June, 2026

A News 365Times Venture

'டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல் நடந்துள்ளது' – அமைச்சர் விக்னேஷ் பகீர் குற்றச்சாட்டு

Date:

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் விக்னேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதே எங்களது லட்சியம். இந்த இலக்கை அடையச் சுதந்திரமாகச் செயல்படுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். சில மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். போதைப்பொருள் சங்கிலியை உடைக்க வேண்டியது அவசியம்.

விக்னேஷ்

தமிழ்நாட்டிற்குள் எந்த வழியிலும் போதைப்பொருள் நுழைவதை அனுமதிக்க மாட்டோம். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போன்று பேசுபவர்கள் நாங்கள் கிடையாது. டாஸ்மாக் துறையில் தற்போது மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளோம். தனிநபர்கள் மற்றும் கட்சிக்காரர்களிடம் சென்று கொண்டிருந்த ரூ.1,000 கோடி ஊழல் பணம் தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான முறையான அரசாணை ஜூன் 5-ஆம் தேதி கொண்டுவரப்பட்டுள்ளது. டாஸ்மாக் மட்டுமல்லாது எந்தத் துறையிலும் இனி ஊழல் இருக்காது. டாஸ்மாக்கில் மாதம் ரூ.100 கோடி வீதம் தனிநபர்களின் கணக்கிற்குச் சென்ற மாபெரும் ஊழல் நடந்துள்ளது. அந்தவகையில் ரூ.3,600 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளத. மதுபான விற்பனையில் மட்டுமின்றி, கொள்முதலிலும் ஊழல் நடைபெற்றுள்ளது.’ என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'தமிழ்நாட்டில் மாற்றம் வரும்' – அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி

தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிதாக இன்னொரு இயக்கம் கூடியிருக்கிறது.பாஜகவில் இருந்து விலகி...

மீண்டும் உயர்ந்தது வீட்டு உபயோக சிலிண்டர் விலை; அதிர்ச்சியில் மக்கள் | Live Updates

சவால் விட்ட ஆர்.எஸ். பாரதி!உள்ளாட்சித் தேர்தலில் 25-ல் 1 மேயர் இடத்தையாவது...

"ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்..!" – ஆதவ் அர்ஜூனாவுக்கு ரிப்ளை கொடுத்த ஆர்.எஸ்.பாரதி

சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற்ற தவெக-வின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஆதவ்...

`தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொள்கை, கோட்பாடு எல்லாம் ஒன்றும் கிடையாது’ – சி.பி.ஐ., முத்தரசன்

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் தனியார் வாகன பயிற்சி மையத்தை இந்திய...