7
June, 2026

A News 365Times Venture

7
Sunday
June, 2026

A News 365Times Venture

`தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொள்கை, கோட்பாடு எல்லாம் ஒன்றும் கிடையாது’ – சி.பி.ஐ., முத்தரசன்

Date:

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் தனியார் வாகன பயிற்சி மையத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் முத்தரசன் தொடங்கி வைத்தார். அதன்பின் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது , “ இந்தியா கூட்டணி, பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக உருவாக்கப்பட்டது.

இதில் தலைமை வகிக்கிற காங்கிரஸ் கட்சி மற்ற இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அந்த கட்சிக்கு உண்டு.  அவர்கள் போனால் இவர்கள் வருவார்கள் என பேசுவது இந்தியா கூட்டணியை ஒருங்கிணைப்பதற்கும் அதை பலப்படுத்துவதற்கும் பயன்படாது.

இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க வேண்டும். அதற்குண்டான அணுகுமுறைகளை காங்கிரஸ் கட்சி தான்  மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

அ.தி.மு.கவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைவது குறித்த கேள்விக்கு, “கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்கட்சியிலிருக்கிற முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீது அமலாக்கதுறை வழக்கு போடுவார்கள்.

யார் மீது வழக்கு போட்டார்களோ அவர்கள் பா.ஜ.க -வில் சேர்ந்தால் தூய்மையானவர்களாக மாறிவிடுவார்கள். அதே போன்ற அரசியல் தான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போதும் அது தான் தொடர்கிறது” என்றார்.

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி எப்படி உள்ளது என்று கேட்டதற்கு, “இப்போது தான் குழந்தை பிறந்திருக்கிறது. இன்னும் தொப்புள் கொடி அறுக்காத குழந்தை; வளரட்டும். அதன் பின் தேறுமா? தேறாதா? என முடிவெடுக்க முடியும் பொறுத்திருந்து பார்ப்போம்”

முதலமைச்சர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை கோட்பாடுகள் கம்யூனிச சித்தாந்தத்தில் வருகிறதா? என கேட்டதற்கு, “கொள்கை கோட்பாடு எல்லாம் ஒன்றும் இல்லை. த.வெக. 108 இடங்களில் வென்று 107 உறுப்பினர்களை கொண்டிருந்தது. ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களை த.வெ.க மட்டுமே கொண்டிருந்தது.

அவர்கள் ஆட்சியமைப்பதற்கு கவர்னரிடம் கடிதம் கொடுத்தார்கள். கவர்னர் ஆட்சியமைக்க அழைக்கவில்லை. இதற்கு முன் எப்படி சசிகலா ஆட்சியமைக்க கடிதம் கொடுத்தும், அதை காலம் தாழ்த்தி, நீதிமன்ற தீர்ப்பை விரைவுபடுத்தி, வேறொரு ஆட்சியை அமைத்தார்களோ, அது மாதிரியான ஒரு ஆட்சி அமையக் கூடாது என்பதற்காகவும், கவர்னர் ஆட்சி மூலம் மறைமுகமாக பா.ஜ.க ஆள முயற்சி செய்ததை முறியடிப்பதற்காகவுமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வருகிறோம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்..!" – ஆதவ் அர்ஜூனாவுக்கு ரிப்ளை கொடுத்த ஆர்.எஸ்.பாரதி

சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற்ற தவெக-வின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஆதவ்...

`ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியில் அமைச்சர்! – தவெக-வில் தஞ்சமடைந்த உடுமலை ராதாகிருஷ்ணனின் பின்னணி

உடுமலை கே. ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். விவசாய குடும்ப பின்னணி...

TVK: 'அன்று விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார்; ஆனால், இன்று…' – தவெக-வில் இணைந்த கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகிலுள்ள சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கடம்பூர் ராஜூ....

CJP: டெல்லி வந்த கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் – ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர...