7
June, 2026

A News 365Times Venture

7
Sunday
June, 2026

A News 365Times Venture

`ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியில் அமைச்சர்! – தவெக-வில் தஞ்சமடைந்த உடுமலை ராதாகிருஷ்ணனின் பின்னணி

Date:

உடுமலை கே. ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். விவசாய குடும்ப பின்னணி என்றாலும் கேபிள் டிவியை தனது தொழில் அடையாளமாக கொண்டிருந்தவர்.

அ.தி.மு.க – வில் இணைந்து உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களாக தொடர்ந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்து வந்தவர். 2016- ல் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.‌

எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். அ.தி.மு.க-வில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்த வந்த இவர், நடந்து முடிந்த தேர்தலில் 2,882 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் ஜெயக்குமாரிடம் தோல்வியைத் தழுவினார்.

தற்போது உடுமலை ராதாகிருஷ்ணன் த.வெ.க- வில் தஞ்சமடைந்துள்ளார்.

உடுமலை ராதாகிருஷ்ணன்

கட்சி மாறிய பின்னணி குறித்து பேசும் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், ” திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து உடுமலை ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டதால், கட்சித் தலைமை மீது அவர் நீண்ட நாள்களாக வருத்தத்தில் இருந்தார்.‌

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க – வில் நிலவி வரும் உட்கட்சி மோதல்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான செயல்பாடுகள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக நீண்ட யோசனையில் இருந்ததார். புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள த.வெ.க- வில் இணைந்தால் அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளவும் தனது அரசியல் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ளவும் அது வசதியாக இருக்கும் என அவருக்கு நெருக்கமான சிலர் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.

த.வெ.க- வில் அவருக்கு மாவட்டச் செயலாளர் அல்லது வாரியத் தலைவர் போன்ற முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம்” என்கிறார்கள்.

பிராந்திய அளவிலான நிர்வாகிகளும் தற்போது அதிமுக-வில் இருந்து தவெக செல்வது, அதிமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்..!" – ஆதவ் அர்ஜூனாவுக்கு ரிப்ளை கொடுத்த ஆர்.எஸ்.பாரதி

சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற்ற தவெக-வின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஆதவ்...

`தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொள்கை, கோட்பாடு எல்லாம் ஒன்றும் கிடையாது’ – சி.பி.ஐ., முத்தரசன்

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் தனியார் வாகன பயிற்சி மையத்தை இந்திய...

TVK: 'அன்று விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார்; ஆனால், இன்று…' – தவெக-வில் இணைந்த கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகிலுள்ள சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கடம்பூர் ராஜூ....

CJP: டெல்லி வந்த கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் – ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர...