25
November, 2026

A News 365Times Venture

25
Wednesday
November, 2026

A News 365Times Venture

“விசுவாசம் என்பது தலைமையை பலவீனப்படுத்துவதில் இல்லை" – கோவை சத்யனைச் சாடும் காயத்ரி ரகுராம்!

Date:

அதிமுக-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழகச் செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை கழக நிர்வாகிகளும் அறிக்கை மூலம் அறிவிப்பு ஒன்றை வழங்கியிருக்கிறார். அதில், “கட்சியின் கருத்துகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்த நிலைப்பாடுகள் குறித்து பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் பிற சமூக ஊடகங்களில் பேட்டி அளிக்கவோ, கருத்து தெரிவிக்கவோ கழகத் தலைமையின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே செயல்பட வேண்டும். எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதற்கு முன்பும் கழகத் தலைமையின் ஒப்புதலைப் பெற வேண்டும். கழக வளர்ச்சிக்காகப் பணியாற்றும் நிர்வாகிகள் அனைவரும் இந்த உத்தரவை முழுமையாகப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கோவை சத்யன்

இந்த அறிக்கையை அதிமுக-வின் செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் அவரின் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்தப் பதிவுக்கு எதிராக அதிமுக மகளிர் அணி நிர்வாகி காயத்ரி ரகுராம் தன் எக்ஸ் பதிவில், “கோவை சத்யன் இதுதான் உங்கள் வேலையா? தவெக-வில் சேர்வதற்கு ஒரு குழுவைத் திரட்டிச் சென்றதாக சொல்லப்பட்டது உங்களைப் பற்றிதானே? அப்போது எங்கே போனது உங்கள் விசுவாசம்? தன்னுடைய பாதுகாப்பின்மையை தலைமை மீது சுமத்தி, யாருக்கு வெளிச்சம் கிடைக்கிறது என்பதைப் பார்த்துக் கவலைப்படும் இதுபோன்ற நஞ்சுக்கள் மீது, அதிமுக தலைமை வைத்திருக்கும் நம்பிக்கை வருத்தமளிக்கிறது.

அரசியல் என்பது தன்மீது கவனம் ஈர்க்கப் போட்டியிடும் இடம் கிடையாது. அது மக்களின் சேவைக்கான இடம். மக்களுக்காக குரல் கொடுக்கவும், கருத்துக்கூறவும் யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை. விசுவாசம் என்பது தன் பாதுகாப்பின்மையை கட்சியின் பாதுகாப்பின்மையாகக் காண்பித்து, தலைமையை பலவீனப்படுத்துவதில் இல்லை. தலைமையை பலப்படுத்துவதில்தான் உண்மையான விசுவாசம் இருக்கிறது. ஆனால் அதிமுக தலைமையையே பாதுகாப்பற்று இருப்பதாகக் காண்பிக்கப் பார்க்கிறீர்கள்.

கருத்துச் சொல்வதற்கு யாரும் உங்களிடம் ஏன் அனுமதி பெறவேண்டும்? இது ஜனநாயக நாடு. கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. அதிமுக-வுக்கும், அதிமுக தலைமைக்கும் ஆதரவாக பேசுவதற்கு உங்களுடைய அனுமதி தேவையில்லை. தலைமையைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, தலைமையை பலவீனமானவராக, பாதுகாப்பற்றவராக காண்பித்து, தலைமையைக் குழப்பும் நபர்களை நிச்சயம் தலைமை புரிந்துகொள்ளும் என நம்புகிறேன். உண்மையான விசுவாசம் என்பது ஆதரவாக நிற்பவர்களின் குரலை ஒடுக்குவதில் இல்லை. தலைமையை வலுப்படுத்துவதில் இருக்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திருப்பரங்குன்றம்: `ஏன் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை?'- தவெக அரசிடம் விளக்கம் கேட்கும் ஆளுநர்

திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் தூணில் தீபமேற்ற வேண்டும் என கடந்த...

செங்கோட்டை: `பணம் வசூலிக்கிறாங்க; ஆனா எனக்கு பங்கு வர்றதில்ல'- போட்டுடைத்த நகராட்சி பெண் கவுன்சிலர்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியில் 24 கவுன்சிலர்கள் உள்ளனர். நகர்மன்றத் தலைவராக...

திருப்பரங்குன்றம்: அனலைக் கூட்டிய 6.30 மணி; `20-24' பரபரத்த அரசு இயந்திரம்… உத்தரவும் மன்னிப்பும்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள 'தீபத்தூண்' பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது...