25
November, 2026

A News 365Times Venture

25
Wednesday
November, 2026

A News 365Times Venture

திருப்பரங்குன்றம்: “நீதிமன்றம் அளித்தது தீர்ப்புதான், நீதி அல்ல..!" – அமைச்சர் வன்னி அரசு

Date:

“யார் தவறு செய்தாலும் அந்தத் தவறை ஏற்றுக்கொள்ளாமல், அது தவறு என்று துணிச்சலுடன் சொல்லக்கூடியவர்தான் நம்முடைய முதல்வர்” என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த உடனேயே FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற எந்தப் பாகுபாடும் காட்டப்படவில்லை. ஒருவேளை ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதால், FIR பதிவு செய்யாமல் தவிர்த்திருக்கலாம். ஆனால், முழுமையாகச் சட்டத்தின் வழியிலும் சட்டத்தின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம்

யார் தவறு செய்தாலும், அது தவறு என்று துணிச்சலுடன் சொல்லக்கூடியவர்தான் நம்முடைய முதல்வர். எனவே, இந்த விவகாரத்தில் எந்தவிதத் தாமதமும் ஏற்படவில்லை. இந்த விசாரணை நீதித்துறையின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவடைந்த பிறகு, அதுகுறித்த விவரங்களை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். எந்தவிதத் தவறுகளுக்கும் நாம் ஒருபோதும் உடன்படவோ, துணை போகவோ மாட்டோம்.

திருப்பரங்குன்றத்தில், ஆகம விதிகளின்படியும், நீண்டகால மரபின் அடிப்படையிலும் முருக பக்தர்கள் எதை விரும்புகிறார்களோ, எந்த இடத்தில் காலங்காலமாகத் தீபம் ஏற்றப்படுகிறதோ அதையே பின்பற்றுவதுதான் எங்களின் நிலைப்பாடு. அதில் நாங்கள் எதையும் மாற்றவில்லை. மலைமீது இருப்பது நில அளவைக் கல்லா அல்லது தீபத் தூணா என்பதே பிரதானமான கேள்வி. உங்களுக்கும் எனக்கும் மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் இந்தச் சந்தேகம் உள்ளது. இந்தச் சந்தேகத்தைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றங்களுக்கு இருக்கிறது. எனவே, மக்களின் உணர்வுகள், நீண்டகால மரபுகள் மற்றும் ஆகம விதிகள் ஆகியவற்றைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப நீதிமன்றங்கள் உரிய முடிவெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம்
கார்த்திகை தீபம் – திருப்பரங்குன்றம்

நில அளவைக் கல்லில் சென்று தீபம் ஏற்றுவது இந்து ஆகம விதிகளுக்கு எதிரானதாக அமையாதா? காலங்காலமாகத் தீபம் ஏற்றப்பட்டு வரும் இடத்தை விடுத்து, வேறு இடத்தை தேர்வு செய்ததின் பின்னணி என்ன? தமிழ்நாட்டில் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள் மதவெறியையும், மத மற்றும் சமூகப் பதற்றத்தையும் உருவாக்குவதையே ஒரே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. இதைத் தடுத்து நிறுத்துவதில் விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் உறுதியாக நிற்கும்.

நீதிமன்றம் கொடுத்தது வெறும் தீர்ப்புதான், நீதி அல்ல. அந்தத் தீர்ப்பை நாம் எந்த அணுகுமுறையில் பார்க்கிறோம் என்பது வேறு விஷயம். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில்தான் நாம் செயல்படுகிறோம். தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை எடுத்து, தீர்ப்பையே மாற்றி அமைப்பதற்கான அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு இல்லை. இங்கே இருக்கும் நல்லிணக்கத்தைச் சிதைக்கும் காவி, ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு இடமில்லை என்பதற்கான ஒற்றை அடையாளம்தான் நேற்று தமிழ்நாடு அரசு எடுத்த முடிவு. கடந்த அரசு எடுக்கத் தவறிய முடிவை இப்போது எடுத்திருக்கிறார்கள். கடந்த முறை அத்தனை சங் பரிவாரத்தினரும் மலை அருகே திரண்டு கலவரத்தை உருவாக்கினர். ஆனால், இந்தத் தவெக அரசு யாரையும் அந்த இடத்தில் அண்டவிடாமல் அனைவரையும் வீட்டிலேயே முடக்கியுள்ளது.

அமைச்சர் வன்னி அரசு
அமைச்சர் வன்னி அரசு

எனவே, கடந்த அரசைவிட ஆளுமையுடன் இன்று தவெக அரசு செயல்பட்டு வருகிறது. மத நல்லிணக்கத்தையும், இந்து பக்தர்களின் உணர்வையும் சரியாக வழிநடத்தி, நிலைநிறுத்தியிருக்கிறது முதல்வர் ஜோசப் விஜய் அரசு. எனவே, இது சரியான முடிவுதான். இதைப் பாராட்டுகிறோம், வரவேற்கிறோம். மேலும், அரசின் இந்த முடிவு சட்டப்படியான நிலைப்பாடுதான். நேற்று திருப்பரங்குன்றம் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகக் குழு ஒரு அறிக்கை வெளியிட்டு, நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றினால் அது உடைந்துவிடும் என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

அது மிகவும் தெளிவான தீர்மானம். அந்தத் தீர்மானத்தையும் மக்களின் உணர்வையும்தான் நடைமுறைப்படுத்த வேண்டும். எனவே, இதை நீதிமன்ற அவமதிப்பாகப் பார்க்க முடியாது. மக்களின் உணர்வையும் நீண்டகால மரபையும்தான் கடைப்பிடித்திருக்கிறார்கள். நீதிமன்றங்கள் ஒரு முடிவெடுக்கும்போது மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பதே மக்களின் கருத்து. நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களையும் சட்டம்-ஒழுங்குப் பிரச்னையையும் இணைத்தே நீதிமன்றத்தில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். அதில் எந்தத் தவறும் இல்லை.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

போராடும் விவசாயிகள்; நெருக்கும் எதிர்க்கட்சிகள்! – டெல்டாவில் என்ன செய்யப் போகிறது தவெக அரசு?

போதிய மழை இல்லாததால் டெல்டாவில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வறட்சியிலிருந்து...

திருமணம் செய்தால் மட்டும் போதுமா? பதிவு செய்வது கட்டாயமா? | சட்டம் சொல்வது என்ன? – 20

“நாங்க சொந்தக்காரங்க முன்னாடி, முறைப்படி திருமணம் செய்துகிட்டோம். ஆனால், திருமணத்தைப் பதிவு...

கள்ளக்குறிச்சி MLA வழக்கு: "நேற்று முன்தினம் SP-ஐ சந்தித்து ஆட்சியர் புகார் அளித்தார்" – DGP தகவல்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் அந்த மாவட்ட கலெக்டருக்கு மெசேஜ் அனுப்பிய...