25
November, 2026

A News 365Times Venture

25
Wednesday
November, 2026

A News 365Times Venture

திருப்பரங்குன்றம்: `ஏன் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை?'- தவெக அரசிடம் விளக்கம் கேட்கும் ஆளுநர்

Date:

திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் தூணில் தீபமேற்ற வேண்டும் என கடந்த ஆண்டு முதல் சர்ச்சை தொடங்கியது. இந்துத்துவ அமைப்புகள் தமிழ்நாட்டின் நல்லிணக்கத்தை குலைக்க திட்டமிடுவதாக விசிக, சிபிஐ உள்ளிட்ட தவெக கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து பேசிவருகின்றன. இந்த நிலையில், இந்த வருடம் திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபமேற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு, ‘அது தீபத் தூண் அல்ல; நில அளவைக் கல்’ என திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. மேலும், தொல்லியல்துறை ஆய்வாளர்களும் அது தீபத்தூண் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

கார்த்திகை தீபம் – திருப்பரங்குன்றம்

இந்த நிலையில், கடந்த நவம்பர் 20-ம் தேதி, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பான இடைக்கால தீர்ப்பில், “நவம்பர் 24-ம் தேதி அன்று ஒருமுறை ஏற்பாடாகத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தது. மேலும், கோயில் நிர்வாகம் மற்றும் பிற அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து இந்த நிகழ்வை ஒருங்கிணைக்க மதுரை மாவட்ட ஆட்சியரை ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும் நியமித்திருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது. அதில், `மதச் சடங்குகள் நடைபெறும் இடமும், முறையும் ஏற்கெனவே உள்ள மரபுகளின் அடிப்படையில் கோயில் நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட வேண்டும்’ என அதில் வாதிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து, வழக்கமான நடைமுறையின்படி உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு அருகிலுள்ள தீப மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலை அறிக்கையில், மாவட்ட நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்த போதிலும், கோயிலின் அறங்காவலர் குழு முன்மொழியப்பட்ட குழுவுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை என்று ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தார். மேலும், மலை மீதிருக்கும் தூணில் தீபம் ஏற்ற முடியாமல் போனதற்கு அவர் வருத்தமும் மன்னிப்பும் கோரினார்.

 ஆளுநர் அர்லேக்கர்
ஆளுநர் அர்லேக்கர்

இந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றம், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மறுத்ததுடன், உரிய மனு தாக்கல் செய்யப்பட்டால் அது குறித்துப் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் ஆகிய இரண்டின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது அரசியல் அரங்கில் கவனம்பெறுகிறது.

இந்த நிலையில், மாநில நிர்வாகம் தொடர்பான விவகாரங்களில் ஆளுநர் கோரும் தகவல்களை முதலமைச்சர் அளிக்க வேண்டும் என்ற சட்டப்பிரிவு 167(பி) அடிப்படையில், மதுரை திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசிடம் விரிவான விளக்கம் கோரி தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “நவம்பர் 24-ம் தேதி மலைமீதிருக்கும் கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் ஒருமுறை அனுமதி வழங்கிய போதிலும், உச்ச நீதிமன்ற உத்தரவு ஏன் செயல்படுத்தப்படவில்லை என்பது குறித்த முழுமையான உண்மை அறிக்கையை முதல்வர் விஜய் சமர்பிக்க வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“விசுவாசம் என்பது தலைமையை பலவீனப்படுத்துவதில் இல்லை" – கோவை சத்யனைச் சாடும் காயத்ரி ரகுராம்!

அதிமுக-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக்...

செங்கோட்டை: `பணம் வசூலிக்கிறாங்க; ஆனா எனக்கு பங்கு வர்றதில்ல'- போட்டுடைத்த நகராட்சி பெண் கவுன்சிலர்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியில் 24 கவுன்சிலர்கள் உள்ளனர். நகர்மன்றத் தலைவராக...

திருப்பரங்குன்றம்: அனலைக் கூட்டிய 6.30 மணி; `20-24' பரபரத்த அரசு இயந்திரம்… உத்தரவும் மன்னிப்பும்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள 'தீபத்தூண்' பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது...