19
July, 2026

A News 365Times Venture

19
Sunday
July, 2026

A News 365Times Venture

'ரத்தத்திற்கு ரத்தம்' கேட்கும் ஈரான்; ட்ரம்ப் குடும்பம் மீது குறியா?

Date:

மிக பயங்கரமான போர்… தற்காலிக போர் நிறுத்தம்… அவ்வப்போது தாக்குதல்கள்… புரிந்துணர்வு ஒப்பந்தம்… போர் நிறுத்தம்… மீண்டும் போர் – இப்படியாக தொடர்கிறது ஈரான், அமெரிக்கா இடையிலான போர்.

ஈரான் போர் தொடக்கத்தின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.

தற்போது அவரது மகன் மொஜ்தபா காமேனி உச்சத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மொஜ்தபா காமேனி

அயோதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கிற்கு பின், மொஜ்தபா காமேனி, “இந்தப் பழிவாங்கல் நமது நாட்டின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும். இது நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

மேலிடத்திலிருந்து கீழ்மட்டம் வரை யாருடைய பெயர்களெல்லாம் தெளிவாகத் தெரியுமோ, அந்தக் குற்றவாளிகள் அனைவரும் தங்களது படுக்கையில் நிம்மதியாக உயிரை விட வேண்டும் என்ற நிறைவேறாத ஆசையுடனேயே தங்களின் கல்லறைகளுக்குச் செல்வார்கள்.

இந்த நடவடிக்கை எனது தனிப்பட்ட இருப்பையோ அல்லது வேறு எந்தவொரு அதிகாரியின் பதவியையோ பொறுத்தது அல்ல என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார்

இந்த நிலையில், ஈரானின் தலைநகரான டெஹ்ரானின் மத்தியில் பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அதில் வெள்ளை மாளிகை எரிந்த பின்னணியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப், ட்ரம்பின் ஐந்து பிள்ளைகள் இவான்கா, டான் ஜூனியர், எரிக், டிஃபானி, பேரன் ஆகியோரின் புகைப்படங்கள் கல்லறையுடன் இடம்பெற்றுள்ளது.

அந்தப் பேனரில் பெர்ஷிய மொழியில், ‘ரத்தத்திற்கு ரத்தம்’ என்றும் எழுதப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்; கோபத்தில் வெளியேறிய எதிர்க்கட்சிகள் – காரணம் 'திரிணாமுல்'

நாளை (ஜூலை 20, 2026) முதல் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க...

`இந்தியாவிலேயே ஒரே முதல்வர் இவர்தான்!'- சூப்பர் எல் நினோ குறித்து அமைச்சர் செங்கோட்டையன் சொல்வதென்ன?

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம்...

`தாய் மாமன் சீர்; கொத்து புரோட்டா; அதிமுக, திமுக கூட்டணி; மிதுன் வருகை' – காயத்ரி ரகுராம் நேர்காணல்

அ.தி.மு.க-வுக்கு இது சோதனையான காலம். அக்கட்சியின் தலைவர்கள் கட்சியை விட்டு விலகி...

`இந்த ஆட்சியில் பணியிட மாறுதல் டெண்டருக்கு லஞ்சம் தேவையில்லை என என்னிடம் கூறுகிறார்கள்'- பெ.சண்முகம்

திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்கதிர் ஆண்டு சந்தா வழங்கும்...