21
July, 2026

A News 365Times Venture

21
Tuesday
July, 2026

A News 365Times Venture

`இந்தியாவிலேயே ஒரே முதல்வர் இவர்தான்!'- சூப்பர் எல் நினோ குறித்து அமைச்சர் செங்கோட்டையன் சொல்வதென்ன?

Date:

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து த.வெ.க அரசின் செயல்பாடுகள் குறித்து கூறியிருக்கிறார். சூப்பர் எல் நினோ தொடர்பான ஆய்வுகள் குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ” தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பொழிவு தற்போது குறைவாகவே இருக்கிறது. வடகிழக்கு பருவமழை கூடுதலாக வருமா என்பது குறித்தும் ஆய்வு செய்யக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பது குறித்து, நிலவும் மழைச் சூழலுக்கு ஏற்ப விவசாயிகளுடன் கலந்தாலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும்.

அமைச்சர் செங்கோட்டையன்

சூப்பர் எல் நினோ மற்றும் பருவமழை குறித்தும் சூப்பர் எல் நினோ பாதிப்புகள் குறித்தும் ஆராய இந்தியாவிலேயே இல்லாத புதிய நடைமுறையை முதல்வர் விஜய் ஆணையிட்டுத் தொடங்கியுள்ளார். இதைக் கண்காணித்து ஆய்வு செய்யச் சிறந்த வல்லுநர்கள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஆய்வு செய்ய வரும்போது, என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் விரிவாக ஆராய்ந்து அறிக்கையாக வழங்க உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டுமே முதன்முறையாக இத்தகைய வல்லுநர் குழுவை அமைப்பதற்கு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டு, அக்குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

VB-GRAM (G) திட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க புதிய நடைமுறைகள்; ஊரக வளர்ச்சித் துறை உத்தரவு

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் VB-GRAM (G) Scheme 2025 திட்டத்தின் கீழ்...

'எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு சபாநாயகரின் அனுமதி தேவையில்லை'-விதிகளை விளக்கிய ஜே.சி.டி. பிரபாகர்

விளாத்திகுளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சபாநாயகரின்...

“முதல்வர் விஜய் எனக்கு ப்ராமிஸ் செய்திருக்கிறார்; அந்நாளுக்காக காத்திருக்கிறோம்!" – நடிகர் பிரபு

'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆண்டுதோறும்...