19
July, 2026

A News 365Times Venture

19
Sunday
July, 2026

A News 365Times Venture

"தினசரி 1 லட்சம் பேர் சாப்பிடுறாங்க" – முதல்வரின் உத்தரவால் வளர்ச்சியடைந்ததா அம்மா உணவகங்கள்?

Date:

தவெக அரசு அமைந்த பிறகு அம்மா உணவகங்களை மேம்படுத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார். முதல்வரின் உத்தரவுப்படி சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்பட்ட பிறகு பயனாளர்களின் எண்ணிக்கையும் வருவாயும் அதிகரித்திருப்பதாக மாநகராட்சி அறிவித்திருக்கிறது.

CM Vijay

சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ”சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், கூலி வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டிட தொழிலாளர்கள், பாரம் தூக்குபவர்கள் எனக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் சென்னைக்குப் பணி நிமித்தமாக வந்து செல்பவர்கள் பயன் பெறும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மற்றும் நோயாளிகள், அவர்களின் துணைவருபவர்கள் பயன்பெறும் வகையில் இராயபுரம், அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய 3 மண்டலங்களில் உள்ள 7 அரசு மருத்துவமனைகளிலும் என மொத்தம் தற்போது 383 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

அம்மா உணவகங்களை மேம்படுத்தி தரமான உணவுகளை மக்களுக்கு வழங்கிட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் தினசரி சராசரியாக 67,164 பயனாளிகள் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வந்த நிலையில், தற்போது தினசரி சராசரியாக 1,04,102 பயனாளிகள் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு பயனடைந்து வருகின்றனர்.

அம்மா உணவகம்
அம்மா உணவகம்

அம்மா உணவகங்களின் வாயிலாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.87,60,489 வருவாய் வந்த நிலையில் தற்போது ரூ.1,35,78,548 ஆக உயர்ந்துள்ளது” எனக் கூறப்பட்டிருக்கிறது

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அயோத்தி அறக்கட்டளை மோசடி: 'குற்றத்திற்கு பிறகு உங்கள் மௌனம்.!' – மோடிக்கு கார்கே, ராகுல் கடிதம்

அயோத்தியில் ராமர் கோயில் அறக்கட்டளையில் முறைகேடு நடந்திருப்பது குறித்து பிரதமர் மோடிக்கு...

டெல்லி அரசு மருத்துவமனையில் சட்டவிரோத காவலில் இருக்கும் சோனம் வாங்சுக்? – என்ன சொல்லப்படுகிறது?

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதவி விலக வேண்டும் என்று...

அமெரிக்காவை 'சாத்தான்' என்று விமர்சிக்கும் மொஜ்தபா; ஈரான் மக்களுக்கு விடுத்த கோரிக்கை என்ன?

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய...

'ரத்தத்திற்கு ரத்தம்' கேட்கும் ஈரான்; ட்ரம்ப் குடும்பம் மீது குறியா?

மிக பயங்கரமான போர்... தற்காலிக போர் நிறுத்தம்... அவ்வப்போது தாக்குதல்கள்... புரிந்துணர்வு...