18
August, 2026

A News 365Times Venture

18
Tuesday
August, 2026

A News 365Times Venture

'கேரளா அல்லா… இனி 'கேரளம்' ஆனு' – கேரளம் – பெயர் மாற்றத்திற்குக் காரணம் என்ன?

Date:

2024-ம் ஆண்டு ஜூன் மாதம், கேரள சட்டமன்றத்தில், அந்த மாநிலத்தின் பெயர் ‘கேரளம்’ என்று மாற்றப்பட வேண்டும் என்கிற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், மத்திய அமைச்சரவை இதற்கு அதிகாரப்பூர்வ முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. அதன் பின், இன்று ‘கேரளம்’ என்கிற பெயருக்கு ஒப்புதல் அளித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

ஆங்கில உச்சரிப்பு!

கேரளா, கேரளம் – வித்தியாசம் என்ன என்கிற கேள்வி எழலாம். கேரளா என்பது ஆங்கில உச்சரிப்புடன் இருக்கிறது என்று அந்த மாநில மக்கள் கருதுகிறார்கள்.

கேரளம் என்பது மலையாள மொழியோடு இயைந்ததாக இருக்கிறது ‘கேரளம்’ மக்கள் கூறுகிறார்கள்.

இன்னொரு பக்கம், கேரளா என்று சொன்னதும், ‘தென்னை மரங்கள் நிறைந்த இடங்கள்’தாம் மனக்கண்ணில் விரிகின்றன.

கேரளம்

பொருள்…

மலையாளத்தில், ‘கேர’ என்றால் ‘தென்னை மரம்’, ‘அளம்’ என்றால் ‘நிலம்’. இதனால், தென்னை மரங்கள் நிறைந்த நிலம் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்தியாவில் ஆங்கில உச்சரிப்பு இருக்கிறது என்று பெயர் மாற்றப்படுவது புதிதல்ல. பாம்பே ‘மும்பை’ என்றும், மெட்ராஸ் ‘சென்னை’ என்றும், கொல்கத்தா ‘கல்கத்தா’, பெங்களூர் ‘பெங்களூரு’ என்றும் முன்பு மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தென்மாநில முதல்வர்கள் மாநாடு: அமித் ஷா தலைமையில் கூடும் 5 மாநில முதல்வர்கள் – எதிர்பார்ப்புகள் என்ன?

நாளையும், நாளை மறுநாளும் (ஆகஸ்ட் 19, 20) செங்கல்பட்டு கோவளத்தில் ‘31-வது...

தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் சந்திப்பு; `இது குறித்தெல்லாம்தான் பேசினேன்' – திருமா சொல்வதென்ன?

நேற்று கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ‘தமிழ்த் தேசிய எழுச்சி...

'இந்தியாவின் கடனை அடைக்க பலே ஐடியா!' – அமைச்சர் கில்லி சரத்தின் '10' பொன் மொழிகள்

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் பேசிய மனிதவள...

'கைவிட்ட காவல்துறை; கட்டுக்கடங்காத கூட்டம்… உயிர்பிழைத்து வந்ததே..!'- விசிக மாநாட்டில் நடந்ததென்ன?

வி.சி.க-வின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு கட்டுக்கடங்காத கூட்டத்தால் பாதியிலேயே கைவிடப்பட்டதும்,...