18
August, 2026

A News 365Times Venture

18
Tuesday
August, 2026

A News 365Times Venture

'இந்தியாவின் கடனை அடைக்க பலே ஐடியா!' – அமைச்சர் கில்லி சரத்தின் '10' பொன் மொழிகள்

Date:

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் பேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ‘கில்லி’ சரத், தவெகவினர் அத்தனை பேரும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு முதல்வரை புகழ்ந்து தள்ளி பொன்மொழிகளாக அவிழ்த்திருந்தார். அதன்வழி இந்தியாவின் கடனை அடைக்கவும் ஒரு பலே ஐடியாவை கொடுத்திருக்கிறார்.

Sarath

அமைச்சர் சரத் முதல்வர் குறித்து அவையில் அவிழ்த்த பொன் மொழிகள்,

> ‘சிறந்த தலைவர்கள் மத்தியில் சிறந்தே பிறந்த தலைவா… நான் மீண்டும் இறந்து பிறந்தால் உங்களை மட்டும் மறவாமல் இருக்க அருள்வாய்.

> கிருஷ்ணன் பிறந்ததை இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். இயேசு பிறந்ததை கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். நபிகள் பிறந்ததை இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள். நாடே கொண்டாடும் பிறந்த தினம் எது தெரியுமா? நாடே கொண்டாடும் எழுச்சி நாள் ஜூன் 22.

> 80 யை கடந்தவர்கள் பேரன் ஆட்சி என்கிறார்கள். 40 இல் உள்ளவர்கள் நண்பன் ஆட்சி என்கிறார்கள். 20 இல் உள்ளவர்கள் ப்ரோ ஆட்சி என்கிறார்கள். 10 இல் உள்ளவர்கள் மாமா ஆட்சி என்கிறார்கள். தாய் வயிற்றில் உள்ளவர்கள் நாளைய ஆட்சியும் கில்லிதான் என்கிறார்கள். மொத்தத்தில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு தவெக ஆட்சிதான்.

> உங்களுக்கு என் ஆயுளையும் என் குடும்பத்தின் ஆயுளையும் சேர்த்து தருகிறேன்.

> எங்கள் இதயத்திலும் இல்லத்திலும் CM ஆக இருக்கும் தலைவா….பாரதத்தின் நாளைய PM நீங்கள்தான்.

Sarath
Sarath

> முதல்வரின் சேவையை பாராட்டுவோருக்கு சேவை வரி விதித்தால் இந்தியாவின் கடனை இன்றே அடைக்கலாம்.

> தமிழகத்தை காக்க வந்த நவசக்தியே…யுவசக்தியே.

சாதாரண தண்ணீர், கோவிலில் தீர்த்தமாகிறது. சாதாரண சாதம் கோவிலில் பிரசாதம் ஆகிறது. அதேமாதிரி, தவெக அலுவலகம் செல்லும் என்னைப் போன்ற எம்.எல்.ஏக்கள் அமைச்சர்கள் ஆகிறார்கள்‘ என்றார்.

கடைசியாக, ‘காலத்தின் அருமை கருதி தீர்மானங்களின் தலைப்பை மட்டும் வாசிக்கிறேன்’ என முக்கியமான மேட்டரை ஹைலைட்டை மட்டும் சொல்லிவிட்டு கில்லியாக அமர்ந்துவிட்டார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் சந்திப்பு; `இது குறித்தெல்லாம்தான் பேசினேன்' – திருமா சொல்வதென்ன?

நேற்று கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ‘தமிழ்த் தேசிய எழுச்சி...

'கைவிட்ட காவல்துறை; கட்டுக்கடங்காத கூட்டம்… உயிர்பிழைத்து வந்ததே..!'- விசிக மாநாட்டில் நடந்ததென்ன?

வி.சி.க-வின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு கட்டுக்கடங்காத கூட்டத்தால் பாதியிலேயே கைவிடப்பட்டதும்,...

வண்ணாங்கோவில்: ஆபத்தான முறையில் காத்திருக்கும் மாணவர்கள் – பேருந்து நிறுத்தம் எப்போது அமைக்கப்படும்?

திருச்சி–திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள வண்ணாங்கோவில் பகுதியில் தனியார் பள்ளி மற்றும் தனியார்...

இந்தியாவைப் பார்த்து அமெரிக்காவும் மாறுகிறதா? வாக்காளர் அட்டைக்கு புதிய சட்டம் – ட்ரம்ப் பிளான்!

1982-ம் ஆண்டில் முதன்முறையாக சோதனை முயற்சியாக இந்தியா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப்...