19
August, 2026

A News 365Times Venture

19
Wednesday
August, 2026

A News 365Times Venture

காவலர் தாக்கப்பட்ட விவகாரம்:“Public Nuisance-ஐ தட்டிக் கேட்பதில் தவறில்லையே" – நயினார் நாகேந்திரன்

Date:

தஞ்சாவூரில் நேற்று விசிக-வினர் சாலமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்த வழியில் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஆகாஷ் (26) என்பவர் தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார்.

இதனால், அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது காவலருக்கும் அந்த இளைஞருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் அந்த இளைஞரை காவல் ஆய்வாளர் அறைந்திருக்கிறார். உடனே இளைஞரும் எதிர்வினையாற்றியிருக்கிறார்.

காவல்துறை – இளைஞர் மோதல்

இந்த விவகாரம் தற்போது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தன் எக்ஸ் பக்கத்தில், “Public Nuisance-ஐ தட்டிக் கேட்பதில் ஒன்றும் தவறில்லையே! தஞ்சாவூரில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினரிடம் தனக்கு வழிவிடுமாறு கேட்ட திரு. ஆகாஷ் என்ற இளைஞருக்கும் விசிகவினருக்கும் இடையே ஏற்பட்ட சச்சரவின்போது, காவல்துறையினர் விசிகவினருக்கு ஆதரவாகச் செயல்பட்டு, திரு. ஆகாஷை கையை ஓங்கி அடிப்பது போல் அச்சுறுத்தி தாக்கியதும், அதற்கு எதிர்வினையாக அந்த இளைஞர் சிறப்பு உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்ததும் துரதிர்ஷ்டவசமானது, கண்டிக்கத்தக்கது.

ஆனால், இதில் தர்மத்தின் வழிநின்று, மனசாட்சிப்படி சற்று சிந்தித்துப் பார்த்தால், அந்த இளைஞரின் பக்கம் உள்ள நியாயமே நமக்குச் சரியெனப் படுகிறது. காரணம், பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டிருந்த விசிகவினரைத்தான் காவல்துறையினர் முதலில் அப்புறப்படுத்தியிருக்க வேண்டும்.

அல்லது அறிவிக்கப்படாத இந்த ஆர்ப்பாட்டத்தால் பாதிப்பிற்குள்ளான பொதுமக்களிடம் பொறுமையாகp பேசி, மாற்று வழி ஏற்பாடு செய்து கொடுத்திருக்க வேண்டும். அதற்காக, காவலர்கள் மீதான வன்முறையை யாரும் நியாயப்படுத்த முடியாது.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

அதேபோல், விசிகவினரின் Public Nuisance-ஐ தட்டிக் கேட்டவரை, அதிகாரத்தின் ஆணவத்தில் சில காவலர்கள் அச்சுறுத்தி, அமைதியாக்க முயன்றதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது. அதிலும், அத்தனை காவலர்கள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து, வம்படியாக காவலர் வண்டியில் ஏற்றுவதைப் பார்த்தாலே மனம் பதறுகிறது.

சாதாரண குற்றங்களில் ஈடுபடுவோருக்கே தமிழக காவல் நிலையங்களில் அடிக்கடி ‘வழுக்கி விழுந்து’ எலும்பு முறிவுகள் ஏற்படும் நிலையில், திரு. ஆகாஷின் நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட இளைஞரின் உயிருக்கும் உடமைக்கும் ஆரோக்கியத்திற்கும் முதல்வர் திரு. விஜய் அவர்கள் முழு உத்தரவாதம் அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! – பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில்...

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள...

"அந்தத் தண்ணீரைக் குடிக்கிறாங்க, கோயிலுக்கு அபிஷேகம் பண்றாங்க" – கூவம் நதி குறித்து சௌமியா அன்புமணி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை...

"தவெக 10 சீட்டுக்கு மேல் ஜெயித்தால்…" – சவாலில் தோற்றதால் மீசையை மழித்த அதிமுக மாசெ

அ.தி‌.மு.க-வின் நீலகிரி மாவட்ட செயலாளராகத் தற்போது பதவி வகித்து வருகிறார் வழக்கறிஞர்...