14
November, 2026

A News 365Times Venture

14
Saturday
November, 2026

A News 365Times Venture

ஆபாச மெசேஜ்: "தவெக எம்எல்ஏ மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்" – அரசு ஊழியர் சங்கம்

Date:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட அலுவலகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் செல்வராணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் வகையில், நவம்பர் 16 முதல் 27 வரை திருச்சி ,திருநெல்வேலி, திருப்பூர், சேலம், நீலகிரி, திருவாரூர் உள்ளிட்ட 11 முக்கிய நகரங்களில் முதல் கட்ட போராட்டங்கள் நடைபெற உள்ளது.

முக்கியமாக, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அரசு துறைகளில் காலியாக உள்ள சுமார் 6.5 லட்சம் பணியிடங்களை காலம் முறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், ஒப்பந்த ஊழிய முறைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும், வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், எம்.ஆர்.பி செவிலியர்கள் என அனைத்து துறை ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியத்தில் நிரந்தர படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தி வருகின்றோம்.

selvarani

இதைத்தவிர, தமிழ்நாடு அரசு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும், தொடர்ந்து காலதாமதம் செய்தால் ஒரு லட்சம் அரசு ஊழியர்களைத் திரட்டி டிசம்பர் 4 ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

அரசு ஊழியர்களின் உரிமைகள் மற்றும் நலனுக்காக மட்டுமே தொடர்ந்து கட்சி சார்பற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்டங்களை நடத்தி வருகிறது. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் த.வெ.க எம்.எல்.ஏ மீது தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு ஊழியர்களில் ஏறத்தாழ 55 சதவிகிதம் பேர் பெண்களாக உள்ளனர். உச்ச அதிகாரம் படைத்த பெண் மாவட்ட ஆட்சியருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மகளிர் அணி துணைக் குழு இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறது” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'சுகாதாரத் தரவுகளை வெளியிடுவதை தமிழ்நாடு அரசு நிறுத்தியதா?' – அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

தமிழக அரசு மாதந்தோறும் வெளியிட்டு வரும் சுகாதாரத் தரவுகளில் இருக்கும் உண்மைகள்...

திருச்சி: 'அம்மன் ஆலயத்தில் ஆகம விதிமீறலா?' – புதிய கழிப்பறைக்கு ஆன்மிக ஆர்வலர் எதிர்ப்பு

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சிறுமணி கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு...

நாகை மெத் கடத்தல் விவகாரம்: தவெக நிர்வாகி பூபாலனுக்குச் சொந்தமான குளத்தில் மெத் பதுக்கலா?

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள திருப்பூண்டி, சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர்...

'பெண்ணின் ரகசிய வாக்குமூலம்; 8 மணி நேர சோதனை; 3 குழிகள்'- ஜெம் வீரமணி வீடு சோதனை; பின்னணி என்ன?

போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜெம் வீரமணியின் ராயப்பேட்டை வீட்டில்...