14
November, 2026

A News 365Times Venture

14
Saturday
November, 2026

A News 365Times Venture

திருச்சி: 'அம்மன் ஆலயத்தில் ஆகம விதிமீறலா?' – புதிய கழிப்பறைக்கு ஆன்மிக ஆர்வலர் எதிர்ப்பு

Date:

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சிறுமணி கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு அரசாயி மலையாளி அம்மன் திருக்கோயிலில், தென்கிழக்குப் பகுதியில் புதிதாக கழிப்பிடம் (கழிவறை) கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாஸ்து சாஸ்திரத்தின்படி தென்கிழக்குத் திசையானது அக்னி மூலையாகக் கருதப்படுகிறது. அம்மன் அக்னி சக்தியுடன் தொடர்புடைய தெய்வமாகப் போற்றப்படும் நிலையில், ஆலயத்தின் அக்னி மூலையில் கழிப்பிடம் அமைத்திருப்பது வாஸ்து சாஸ்திரக் கோட்பாடுகளுக்கு முரணானதாகக் கருதப்படுகிறது என்று இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கம் நிறுவனர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி குற்றம்சாட்டியுள்ளார்.

makeswari vaiyapuri

இதுபற்றி, நம்மிடம் பேசிய அவர், “அருள்மிகு அரசாயி அம்மன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்மனின் வலதுபுறத்தில், அதாவது தென்கிழக்குப் பகுதியில், புதிதாக இந்தக் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஆலயத்தின் புனிதத்தன்மை, ஆகம மரபுகள் மற்றும் வாஸ்து சாஸ்திரக் கோட்பாடுகளைக் கருத்தில் கொண்டு, இத்தகைய கட்டுமானம் இப்படி மேற்கொள்ளப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

பொதுவாக, வாஸ்து சாஸ்திரக் கோட்பாடுகளின்படி கழிப்பறை அமைப்பதற்கு வடமேற்குப் பகுதி ஏற்ற இடமாகக் குறிப்பிடப்படுகிறது. இருப்பினும், குறிப்பிட்ட திருக்கோயிலின் ஆகம மரபு, ஸ்தல அமைப்பு மற்றும் கட்டட விதிமுறைகளின் அடிப்படையில் உரிய வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்வது அவசியமாகும்.

இவ்வாறு அம்மன் சந்நிதிக்கு அருகில், தென்கிழக்கு அக்னி மூலையில் கழிப்பிடம் அமைத்திருப்பது ஆலயத்தின் புனிதத்தன்மையைப் பாதிப்பதுடன், திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் மனதிலும் வேதனையையும், அதிருப்தியையும் ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறையும், திருக்கோயில் நிர்வாகமும் உடனடியாகக் கவனம் செலுத்தி, புதிதாகக் கட்டப்பட்டுள்ள கழிப்பிடத்தின் இடம் மற்றும் கட்டுமானம் குறித்து நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அதோடு, சம்பந்தப்பட்ட திருக்கோயிலின் ஆகம மரபுகள் மற்றும் வாஸ்து சாஸ்திரக் கோட்பாடுகளின்படி உரிய வல்லுநர்களின் கருத்தைப் பெற வேண்டும். கட்டுமானத்திற்கான நிர்வாக அனுமதி, அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் மற்றும் தொடர்புடைய விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

toilet

அதனைத்தொடர்ந்து, விதிமீறல் அல்லது முறையற்ற கட்டுமானம் உறுதி செய்யப்பட்டால், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி அதனை அகற்றவோ அல்லது தகுந்த மாற்று நடவடிக்கை எடுக்கவோ வேண்டும். அம்மன் ஆலயத்தின் புனிதத்தன்மையையும், ஆகம மரபுகளையும், பக்தர்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பது அறநிலையத்துறையின் முக்கியப் பொறுப்பாகும்.

எனவே, இவ்விவகாரத்தில் காலதாமதமின்றி உரிய விசாரணை நடத்தி, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

நாகை மெத் கடத்தல் விவகாரம்: தவெக நிர்வாகி பூபாலனுக்குச் சொந்தமான குளத்தில் மெத் பதுக்கலா?

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள திருப்பூண்டி, சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர்...

'பெண்ணின் ரகசிய வாக்குமூலம்; 8 மணி நேர சோதனை; 3 குழிகள்'- ஜெம் வீரமணி வீடு சோதனை; பின்னணி என்ன?

போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜெம் வீரமணியின் ராயப்பேட்டை வீட்டில்...

'குழி தோண்டி நீச்சல் குளத்தைச் சேதப்படுத்திட்டாங்க' – ஜெம் வீரமணி குடும்ப வக்கீல் குற்றச்சாட்டு

போக்சோ வழக்கில் கைதான ஜெம் வீரமணியின் ராயப்பேட்டை வீட்டில் சிறுமிகளின் உடல்...

வந்தே பாரத் Sleeper ரயிலில் RAC இருக்கை ரத்து; விரைவில் அனைத்து ரயில்களிலும் RACக்கு முற்றுப்புள்ளி?

நீண்ட தூர ரயில்களில், உறுதிப்படுத்தப்பட்ட சீட்கள் முடிந்த பிறகு டிக்கெட் முன்பதிவு...