14
November, 2026

A News 365Times Venture

14
Saturday
November, 2026

A News 365Times Venture

'சுகாதாரத் தரவுகளை வெளியிடுவதை தமிழ்நாடு அரசு நிறுத்தியதா?' – அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

Date:

தமிழக அரசு மாதந்தோறும் வெளியிட்டு வரும் சுகாதாரத் தரவுகளில் இருக்கும் உண்மைகள் சித்திரித்து வெளியிடப்படுவதாகக் கூறி, தரவுகள் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், அமைச்சர் அருண் ராஜ், “தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக வெளியிடப்படும் மாதாந்திர சுகாதாரச் செய்திக்குறிப்பு தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த உடன் நிறுத்தப்பட்டுவிட்டதாக சமூக வலைத்தளங்களிலும், சில நாளிதழ்களிலும் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.

இது குறித்த தெளிவான விளக்கத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முன்வைக்கிறது” எனக் குறிப்பிட்டு தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கப் பதிவைப் பகிர்ந்திருந்தார்.

முதல்வர் விஜய்

அதில், “தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய்திக்குறிப்பு. TN Health Bulletin குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக வெளியிடப்படும் மாதாந்திர சுகாதாரச் செய்திக்குறிப்பு தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த உடன் நிறுத்தப்பட்டுவிட்டதாக சமூக வலைத்தளங்களிலும், சில நாளிதழ்களிலும் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.

இது குறித்த தெளிவான விளக்கத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முன்வைக்கிறது:

1. வெளியீடு நிறுத்தமும், விரிவான மாற்றங்களும் மேம்பாடும் (Comprehensive Revival): மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய்திக்குறிப்பு வெளியிடுவது 2024 ஆண்டு டிசம்பர் மாதம் துவக்கப்பட்டது.

கடந்த ஆட்சி காலத்திலேயே இந்த ஆண்டு- 2026 பிப்ரவரி மாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது, தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த உடன் இந்தச் செய்திக்குறிப்பை மேலும் மெருகேற்றி, விரிவான மற்றும் பயனுள்ள தகவல்களுடன் கூடிய புதிய வடிவில் வெளியிடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

2. புதிய அறிக்கையில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெறும்? பழைய முறையை விடவும், இனி வரும் செய்திக்குறிப்புகள் பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் கீழ்க்கண்ட அம்சங்கள் புதிதாக இணைக்கப்பட உள்ளன:

• விரிவான பின்னணித் தகவல்கள்: வெறும் எண்களாக மட்டுமின்றி, தரவுகளுக்கான விரிவான விளக்கங்கள் (Contextual information).

• புதிய முன்னெடுப்புகள்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையால் தொடங்கப்பபடும் புதிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த முழுமையான தொகுப்பு.

• மாநில அளவிலான புதிய குறியீடுகள் மற்றும் மாவட்ட வாரியான குறியீடுகள் (District-wise Indicators): மாநிலத்தின் பொது சுகாதாரச் செயல்பாடுகளை இன்னும் துல்லியமாக அறிந்துகொள்ளும் வகையில், மாநில அளவிலான புதிய குறியீடுகளும் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான முக்கிய சுகாதாரக் குறியீடுகள் இனி அறிக்கையில் இடம்பெறும்.

அருண் ராஜ்
அருண் ராஜ்

3. எங்களின் நோக்கம் (Vision & Purpose): மருத்துவத் தரவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான பொது சுகாதாரத் திட்டமிடலை (Evidence-based public health planning) மேலும் வலுப்படுத்துவதே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் நமது அரசின் முக்கிய நோக்கமாகும். புதிய வடிவிலான இந்தச் செய்திக்குறிப்பு அதற்கான மிகச் சிறந்த கருவியாகச் செயல்படும். மேம்படுத்தப்பட்ட, விரிவான தகவல்களை உள்ளடக்கிய புதிய தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய்திக்குறிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திருச்சி: 'அம்மன் ஆலயத்தில் ஆகம விதிமீறலா?' – புதிய கழிப்பறைக்கு ஆன்மிக ஆர்வலர் எதிர்ப்பு

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சிறுமணி கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு...

நாகை மெத் கடத்தல் விவகாரம்: தவெக நிர்வாகி பூபாலனுக்குச் சொந்தமான குளத்தில் மெத் பதுக்கலா?

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள திருப்பூண்டி, சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர்...

'பெண்ணின் ரகசிய வாக்குமூலம்; 8 மணி நேர சோதனை; 3 குழிகள்'- ஜெம் வீரமணி வீடு சோதனை; பின்னணி என்ன?

போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜெம் வீரமணியின் ராயப்பேட்டை வீட்டில்...

'குழி தோண்டி நீச்சல் குளத்தைச் சேதப்படுத்திட்டாங்க' – ஜெம் வீரமணி குடும்ப வக்கீல் குற்றச்சாட்டு

போக்சோ வழக்கில் கைதான ஜெம் வீரமணியின் ராயப்பேட்டை வீட்டில் சிறுமிகளின் உடல்...