20
July, 2026

A News 365Times Venture

20
Monday
July, 2026

A News 365Times Venture

`இந்த ஆட்சியில் பணியிட மாறுதல் டெண்டருக்கு லஞ்சம் தேவையில்லை என என்னிடம் கூறுகிறார்கள்'- பெ.சண்முகம்

Date:

திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்கதிர் ஆண்டு சந்தா வழங்கும் சிறப்பு பேரவை நடைபெற்றது. இதில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்…

“நவம்பர் மாதம் 1ஆம் தேதி தான் தமிழ்நாடு என்று பெயர் அறிவிக்கப்பட்ட நாள். ஜூலை 18ஆம் தேதி “தமிழ்நாடு என்று அறிவிக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றிய நாளை தமிழ்நாடு நாள் என கொண்டாட வேண்டும் என திமுகவினர் வற்புறுத்தி வருகிறார்கள். அதிகாரபூர்வமாக அரசு அறிவித்த நாளை எடுத்துக் கொள்வது தான் பொருத்தமாக இருக்கும்.

கன்னியாகுமரி லாக்கப் டெத் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை… குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள், அரசின் சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் தரப்பில் ஏன் இந்த விவகாரம் பற்றி பேசவில்லை என நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். சமீபத்தில் முதல்வரை சந்திக்கும் போதுகூட, தமிழ்நாட்டில் இது போன்ற லாக்கப் டெத் நடைபெறக் கூடாது என்று கோரிக்கை வைத்தேன்.

எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி என்ற முறையில் தவெக செயல்பாடு குறித்து பேசி வருகிறார். இன்று மட்டுமல்ல, தவெக ஆளக்கூடிய 5 ஆண்டுகளும் அப்படித்தான் சொல்வார்.

தமிழக வெற்றிக் கழக ஆட்சி சரியான திசையில் செல்கிறது, ஆடு மாடு பலியிடுவது, திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்ட மதச்சார்பற்ற கொள்கையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது போன்றவை பாராட்டுக்குரியவை.

பெ.சண்முகம்

தூய்மை பணியாளர் பணியை தனியாரிடம் ஒப்படைப்பது போன்ற சில விஷயங்களில் எங்களுக்கு விருப்பமில்லை. அதனால் எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தோம், அவர்கள் அதை திரும்ப பெறுகிறார்கள்.

அமைச்சர்கள் அனைவரும் அரசின் சார்பில், மக்கள் பிரச்னைகளுக்கு பதில் சொல்கிறார்கள். முதல்வர் விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன் என நீங்கள் முதல்வர் விஜய் அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

2026 தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை, ஆளாளுக்கு வெளியில் இருந்து ஆட்சி நீடிக்காது என்று சொல்வது ஒரு தவிர்க்க முடியாத விஷயமாக மாறிவிட்டது.

நாங்கள் வெளியில் இருந்து ஆதரவளித்து, பெரும்பான்மையுடன் ஆட்சி நடக்கிறது. எங்களுடைய ஆதரவில் எந்த மாற்றமும் இல்லை.

எக்காலத்திலும் இந்த தவெக ஆட்சியின் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம்.

ஸ்டாலின் கோபப்பட்டால் இந்த ஆட்சி கலைந்து விடும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கூறுவது, எப்படி பொருத்தமாக இருக்கும்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் கவிழும் என்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

அவ்வளவு பலவீனமாக உள்ளதா தவெக…? ஒன்றை கோடி மக்கள் அவர்களுக்கு வாக்கு செலுத்தி உள்ளார்கள்.

விஜய்
விஜய்

பலர் எனக்கே அலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்த ஆட்சி வந்த பிறகு இடமாறுதல் , டெண்டர் போன்ற விஷயங்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இடதுசாரிகள், ஒரு தனி அணியாக செயல்பட முடிவெடுத்துள்ளோம். அந்த அடிப்படையில் இடதுசாரி கட்சிகளின் மாநில ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் நடக்கும்போது, அப்போது உள்ள அரசியல் சூழல் பொறுத்து யாருடன் கூட்டணி என்று அறிவிப்போம். இடதுசாரிகள் தான் மாற்று அரசியலை கொடுப்போம். அது மூலமாகத்தான் மக்கள் பிரச்னைகளை தீர்க்க முடியும். தவெக MLA களிடம் திமுக சார்பில் பேரம் பேசப்பட்டது குறித்து வழக்கு நடைபெற்று வருகிறது. தீர்ப்பு வரும் பொழுது அதை பார்த்துக் கொள்ளலாம்.

குருவை சாகுபடிக்கு தண்ணீர் வராததால் மிகப்பெரிய உற்பத்தி இழப்பு, தமிழகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பயிர்கள் கருகி உள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு இழப்பீடு தரவேண்டுமே தவிர உடனடியாக வறட்சி பாதித்த மாவட்டம் என திருவாரூரை அல்லது டெல்டா மாவட்டங்களை அறிவிக்க வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை. நிவாரணம் வேண்டி வேண்டுமானால் சிபிஎம் சார்பில் போராட்டத்தை முன்னெடுப்போம்.

சமூக நீதித்துறை பெயர் மாற்றம் தேவையில்லாத ஒன்று… அதே பெயரில் தொடர்ந்து இருக்கலாம். பெயர் மாற்றி இருந்தாலும் அதை பற்றி விவாதிக்க வேண்டியதில்லை.

பெ.சண்முகம்

அந்த துறை மக்களுக்கு என்ன செய்கிறது என்பதை தான் பார்க்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பற்றாக்குறை பகிர்வு என்ற அடிப்படையில் கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும். அதை பெறுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையமும் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

டெல்லியில் போராடும் சோனம் அவர்களுக்கு ஆதரவாக எங்கள் கட்சியின் சார்பில் 21 ஆம் தேதி ஒருவேளை உணவை புறக்கணித்து அவருக்கு ஆதரவு அளிக்க உள்ளோம்.

அவருடைய போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கும்” என்று அவர் கூறினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ம.பி-யில் பொது சிவில் சட்டம்: திருமணமானவர் வேறு ஒருவருடன் 'Live in'-ல் இருந்தால் என்ன தண்டனை?

நாட்டில் பா.ஜ.க ஆளும் சில மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமலில்...

திமுக எம்எல்ஏ கைது: “திமுக-வினரைத் துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கில்…" – ஆர்.எஸ். பாரதி கண்டனம்

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,...

'ராமர் கோயில், நீட் முறைகேடு, ஒரே நாடு ஒரே தேர்தல்' – மோடி உரையில் இல்லாதவை குறித்து காங். பட்டியல்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று பிரதமர் மோடி உரையாற்றினார்.அந்த...

"There Will Be Consequences.!"- திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்!

தூத்துகுடி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட...