21
July, 2026

A News 365Times Venture

21
Tuesday
July, 2026

A News 365Times Venture

"There Will Be Consequences.!"- திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்!

Date:

தூத்துகுடி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியிருந்தார்.

அதாவது , “சட்டமன்றத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன் உன் தகப்பனாரை என்று சொல்கிறானே, நான் கேட்கிறேன்.. மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர்(விஜய்), உன்னை சட்டமன்றத்திற்குள் வைத்துப் பார்த்துக் கொள்கிறோம்.

விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்

ஸ்டாலின் கண்டனம்

நாங்கள் என்ன கோமாளி பயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? சட்டமன்றத்தை கூட்டும் போது உனக்கு எலும்பு இருக்காது, உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம், சட்டமன்றத்தை கூட்டிப் பார். யார் ஓடியது? கைது செய்து விடுவார்கள் என்று இரவோடு இரவாக கரூரில் இருந்து கேராவனில் யாரை வைத்துக்கொண்டு நீ ஓடினாய்?” என்று பேசியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து முதல்வர் குறித்து அவதூறாக பேசியதால் விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Take Diversion Model

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.

மார்க்கண்டேயன் கைது
மார்க்கண்டேயன் கைது

சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?

“அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?” என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.

அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?

தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

There will be consequences

ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences” என்று பதிவிட்டு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மார்க்கண்டேயன் கைது: "அவங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?" – கீதா ஜீவன்

தூத்துக்குடியில் கடந்த 18 ஆம் தேதி தி.மு.க சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி...

“என்னை தவெக-வில் இணையச் சொன்னதே தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதீர்தான்" – அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்ட...

கிணத்துகடவு தொகுதியில் ஆய்வு; தூய்மைப் பணியாளர்களுடன் சாக்கடையைச் சுத்தம் செய்த அமைச்சர் விக்னேஷ்

கோவை மாவட்டம் கிணத்துகடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை...

திருச்சி: பட்டியல் சமூக கிறிஸ்தவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு; 3 நாள்கள் போராட்டத்திற்கு பிறகு அடக்கம்

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கோட்டப்பாளையம் கிராமத்தில் கிறிஸ்தவ பட்டியல் சமூகத்தைச்...