15
September, 2026

A News 365Times Venture

15
Tuesday
September, 2026

A News 365Times Venture

Stalin: "ஸ்டாலினுக்கு வைரல் காய்ச்சல்" – திமுக முப்பெரும் விழாவை ஒத்திவைப்பதாக துரைமுருகன் அறிவிப்பு

Date:

இன்று மாலை சென்னை அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெற இருந்தது.

ஆனால், அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அண்ணா பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை.

திமுகவின் மூத்த தலைவர்கள் துரைமுருகன், டி.ஆர். பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

துரைமுருகன் அறிவிப்பு

இந்த நிகழ்வுக்குப் பிறகு, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்…

“எங்கள் தலைவர் ஸ்டாலினுக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், இன்று மாலை நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின்

விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்று நாள்களையும் இணைத்துக் கொண்டாடப்படுவதுதான் இந்த முப்பெரும் விழா ஆகும்.

வழக்கமாக, இந்த முப்பெரும் விழாவில் ஸ்டாலின் கலந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

BRICS : `வயதுக்கு வந்துவிட்டதா' பிரிக்ஸ்? `டில்லிப் பிரகடனம்' – முழு அலசல்! | மணிவண்ணன் திருமலை

மணிவண்ணன் திருமலை, மேனாள் ஆசிரியர் , பிபிசி உலக சேவை, லண்டன்பிரிக்ஸுக்கு வயது 20 - அதன்  செல்வாக்குக்கு?  டில்லியில் நடந்து முடிந்த பிரிக்ஸ் நாடுகளின் 18வது...

ஈரான் போரால் சொந்த நாட்டில் ட்ரம்பிற்கு வந்த 'வினை'; இதைச் சமாளிக்க ட்ரம்ப் தரும் விளக்கம் என்ன?

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் மிட் டேர்ம் தேர்தல் நடக்க உள்ளது....

நெல்லை: "முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்கத்தான் லண்டன் சென்றாரா?" – நயினார் நாகேந்திரன் கேள்வி

நெல்லை பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார்...

திருச்செந்தூர் அம்பேத்கர் சிலை விவகாரம்; திருமாவளவன் முன்பு இரு தரப்பினர் மோதலால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை...