தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, “புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கச் சட்டத்தில் இடமில்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். எந்த நிதியையும் தமிழ்நாட்டிற்குத் தர முடியாது எனச் சொல்லும் உரிமை மத்திய அரசுக்குக் கிடையாது. இது ஒரு ஜனநாயக நாடு. மாநிலங்களுக்கு உரிமை இருக்கிறது.
தமிழகம் எக்ஸ்டல் பெடரல் ஸ்டேட். மத்திய அரசு கோ ஆப்பரேட் செய்யாமல் பெடரலிசம் இருப்பதற்கு வாய்ப்பு கிடையாது. தமிழ்நாட்டு மக்களுடைய போர் குணம் எள்ளளவும் குறைந்துவிடவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பொது பட்டியலில் இருக்கக்கூடிய கல்விக் கொள்கையை மத்திய அரசானது மாநிலங்களின் மீது திணித்துக் கொண்டிருக்கிறது.
எல்லா வரியும் ஜி.எஸ்.டி வழியாக வசூல் செய்து கொண்டு தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் தர முடியாது. நாங்கள் சொல்லக்கூடிய அத்தனை விஷயங்களையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர்களே தொடர்ந்து வலியுறுத்தி நிர்ப்பந்தங்களை, திணிப்புகளை நம் மீது வைக்கிறார்கள். அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழக அரசைப் பார்க்காமல் தமிழக மக்களைப் பார்த்து புதிய கல்விக் கொள்கைக்கு நிதி ஒதுக்க வேண்டும். தி.மு.க அரசோ தமிழக அரசோ தமிழக மக்களிடம் எந்த ஒரு மொழியையும் படிக்கக்கூடாது என்று சொன்னதில்லை. ஒரு மொழித்திணிப்பு என்று வரும் போதுதான் அதனை எதிர்க்கின்றோம். இதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play