13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

"திமுக நம்முடன் இணைந்து செயல்படும்; பினராயி விஜயனை என்னால் கட்டிப்பிடிக்க முடியாது" – ராகுல் காந்தி

Date:

கடந்த திங்கட்கிழமை (ஜூன் 8), டெல்லியில் இந்தியாக் கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாக் கூட்டணி கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய ஆடியோவை வெளியிடப்பட்டுள்ளது இந்திய காங்கிரஸின் எக்ஸ் பக்கத்தில்.

ராகுல் காந்தி பேசியுள்ள முக்கிய பாயிண்ட்ஸ்…

> வருத்தத்துடன் சொல்கிறேன்… இந்த ஆலோசனைக் குழுவில் ஒரு குழப்பம் நிலவுகிறது. சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகளாகிய நீங்கள், இதுவரை பயன்படுத்தி வந்த அதே அரசியல் வழிமுறைகள் இப்போதும் வேலை செய்யும் என்று நம்புவதுதான் அந்தக் குழப்பம்.

நிதிஷ் குமார்

> தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்… கடந்த 2024 தேர்தலில் நாம் வெற்றி பெற்றோம்… நாம் தோற்கவில்லை. நிதிஷ் ஜி ஏன் கூட்டணியை விட்டு வெளியேறினார் என்று கேட்டீர்கள்; அதற்கு நானும் காரணமல்ல, காங்கிரஸ் கட்சியும் காரணமல்ல.

> நமது சிந்தனை மாற வேண்டும். “நமக்குள்ளே நாம் சண்டையிடக் கூடாது, ஊடகங்களுக்கு நம்மைக் தாக்க ஒரு வாய்ப்பைக் கொடுக்கக் கூடாது, நாம் எதிர்த்து நிற்க வேண்டும்” என்ற சிந்தனை இப்போது வர வேண்டும். அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதுதான் சவால் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அடுத்த தேர்தல் ஏற்கனவே வெல்லப்பட்டுவிட்டது. இந்திய மக்களிடையே அவ்வளவு ஆக்ரோஷமான கோபம் நிலவுகிறது. அடுத்த தேர்தலின் முடிவு இப்போதே முடிந்துவிட்டது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

> இந்த அரசு நீடிக்காது. ஏனென்றால், அது நமது ஜனநாயகத்தை அழித்துவிட்டது. இந்திய மக்களின் எதிர்காலத்தைச் சிதைத்துவிட்டது. ஈரான் விவகாரத்திற்குப் பிறகு இப்போது வரவிருக்கும் சூழ்நிலைகளைக் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அது கட்டுப்பாடற்றதாக இருக்கும்.

அது மக்களைத் திரட்டுவதற்கான ஒரு பெரிய இடத்தை நமக்கு உருவாக்கிக் கொடுக்கும். மேலும், நாம் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்ற எண்ணத்தைத் தயவுசெய்து கைவிடுங்கள்.

இவை அனைத்தும் பாஜகவும், ஊடகங்களிலுள்ள அவர்களின் நண்பர்களும் பரப்பி வரும் வதந்திகள். இது உண்மையல்ல, இதில் எனக்கு 100% உறுதி இருக்கிறது. இந்த விஷயத்தில் திமுக குறித்து என்னால் இப்போதே உறுதியளிக்க முடியும். அவர்கள் நம்முடன் இணைந்து செயல்பாடுவார்கள்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

> இந்தியாவின் உன்னதக் கொள்கைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வரும்போது, இந்த அறையிலுள்ள ஒவ்வொரு நபரும் களத்தில் இருப்பார்கள். நமக்குள்ளே சண்டைகள் இருக்கத்தான் செய்கின்றன.

அதற்காக, கேரளாவின் முன்னாள் முதலமைச்சரைச் சென்று நான் கட்டிப்பிடிக்க வேண்டும் என்று நீங்கள் கேட்டால், அதை என்னால் செய்ய முடியாது. நான் செய்ய மாட்டேன்.

ஏனென்றால், அவருடன் எனக்குத் தொடர்ச்சியான அரசியல் போராட்டம் இருக்கிறது. எனவே, நாம் நெகிழ்வுத்தன்மையோடு இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருக்கின்றன.

அவைச் சிதறிக்கிடக்கின்றன என்பதை நிரூபிப்பதற்காக நம்மீது ஒரு முழு அளவிலான தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும்.

> பாஜக-வை நாம் வீழ்த்துவோம் என்ற நம்பிக்கையை இந்த அறையிலுள்ள ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையோடு தொடங்குங்கள்.

அவர்கள் ஏமாற்றினாலும் சரி, ஏமாற்றாவிட்டாலும் சரி, ஒவ்வொரு மாநிலமாக, ஒவ்வொரு தேர்தலாக அவர்கள் வீழ்வார்கள் என்று நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன்”.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'ஏழை மக்கள் பயன்படுத்தும் ஆவின் பச்சைப் பால் விற்பனை விரைவில் ரத்தா?' – அன்புமணி கண்டனம்

ஆவின் பால் நிறுவனத்தில் பச்சை நிறப் பால் பாக்கெட் விற்பனையைக் குறைத்துள்ளதற்கு...

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக...

'ஆபரேஷன் இரட்டை இலை' – மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த்...

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு...