23
September, 2026

A News 365Times Venture

23
Wednesday
September, 2026

A News 365Times Venture

GEM வீரமணி வழக்கு: “அரசியல்வாதிகளையும் காவல்துறையையும் விசாரிக்க வேண்டும்" – அண்ணாமலை வலியுறுத்தல்

Date:

GEM கிரானைட்ஸ் உரிமையாலர் வீரமணி மீதான போக்சோ வழக்கில் ஆரம்பத்தில் தமிழ்நாடு காவல்துறை காட்டிய அலட்சியமும், நீதிமன்ற தலையீட்டிற்குப் பின் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளும் அதிகார வர்க்கத்தின் பின்னணியை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன என வீ தி லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “ஒரு காலத்தில் நம் நாட்டிலேயே சிறந்த காவல்துறையாகப் பாராட்டப்பட்ட தமிழ்நாடு காவல்துறை, கடந்த சில ஆண்டுகளில் ஊழல் நிறைந்ததாகவும், திறமையற்றதாகவும், அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் துறையாகவும் மாறியுள்ளது.

அண்ணாமலை

பல இளம் குழந்தைகளை, பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய pedophile குற்றவாளியான GEM கிரானைட்ஸ் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கின் ஆரம்பக் கட்ட விசாரணையை, தமிழ்நாடு காவல்துறை எப்படிக் கையாண்டது என்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

சிறுமி ஒருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவரையும், குற்றத்தைச் செய்தவரையும் அடையாளம் காண முடியவில்லை என்று காரணம் கூறி, தமிழ்நாடு காவல்துறை விசாரணையை முடித்து வழக்கை மூட முயன்றது.

ஆனால், அந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்ததுடன், மேலதிக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. விசாரணை மீண்டும் தொடங்கப்பட்ட பின்னர், காவல்துறை GEM கிரானைட்ஸ் வீரமணியையும், அவருடன் தொடர்புடையவர்களையும் கைது செய்ததுடன், அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த சிறுமியும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதைவிட முக்கியமாக, விசாரணையில் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர்களில் பலர், இந்தப் பாலியல் தாக்குதல் நடைபெற்ற காலத்தில், சிறார்களாக இருந்தவர்கள் என்றும் தெரிய வருகிறது.

தொழிலதிபர் வீரமணி
தொழிலதிபர் வீரமணி

இதன் மூலம், இந்தப் பாலியல் அத்துமீறல்கள், பல வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்றிருக்கக்கூடும் என்ற அதிர்ச்சியான தகவலும் வெளிப்பட்டிருக்கிறது. நேர்மையான மற்றும் உறுதியான காவல்துறை அதிகாரிகள் ஒரு சிலர் நினைத்தால், எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த வழக்கு அமைந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, தவெக அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. நேற்று, GEM கிரானைட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரை, GEM வீரமணி தொடர்பான ஆபாச வீடியோவைத் தன்னிடம் வைத்திருந்ததாகக் கூறி தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த விசாரணையானது, வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுடன் முடிவடைந்து விடக்கூடாது. கடந்த பல ஆண்டுகளாக அவரைப் பாதுகாக்கவும், அவருக்கு ஆதரவாகச் செயல்படவும் உதவிய ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும், இதில் தொடர்புடைய ஒவ்வொரு அரசியல்வாதியும் என, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த வழக்கை நீர்த்துப் போக முயற்சித்த ஒவ்வொரு நபரும், சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும். இந்த வழக்கில், மிகப்பெரிய அளவில் பணம் கைமாறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு காவல்துறை

இத்தனை ஆண்டுகளாக, இந்தக் குற்றச் செயல்கள் தொடர அனுமதித்த அத்தனை நபர்களையும் வெளிக்கொண்டு வருவதற்காக, உடனடியாக ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட வேண்டும். மேலும், தமிழ்நாடு காவல்துறை கடந்த காலத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதும் மிகவும் முக்கியம். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களின், குறிப்பாக சிறார்களாக இருந்தவர்களின் அடையாளங்களும் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் எந்த நிலையிலும் சமரசம் செய்யப்படக் கூடாது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`இடைத்தேர்தல்; இணைந்த கைகள் வெற்றி' – தூத்துக்குடியில் பரபரப்பைக் கிளப்பிய விஜய் – அஜித் போஸ்டர்!

எம்.ஜி.ஆர்- சிவாஜி, ரஜினி- கமல் ஆகிய ஹீரோக்களின் வரிசையில் நடிகர்களான விஜய்-...

சிபிஐ-க்கு அவகாசம்; `ஜாமீன்' இடைக்காலத் தடை நீடிப்பு: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த கே.ஆம்ஸ்ட்ராங் படுகொலை...

பாலியல் வழக்கு; “தவெகவினருக்காக மட்டும் 'Compromise' செய்துகொள்கிறாரா முதல்வர்?" – டிடிவி தினகரன்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் அடுத்தடுத்து சிக்கும் தவெக நிர்வாகிகள்...

தாராபுரம்: `விருப்பப்பட்டவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்..!' – ஆவேசமான நிர்வாகிகள்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6- ம்...