23
September, 2026

A News 365Times Venture

23
Wednesday
September, 2026

A News 365Times Venture

`இடைத்தேர்தல்; இணைந்த கைகள் வெற்றி' – தூத்துக்குடியில் பரபரப்பைக் கிளப்பிய விஜய் – அஜித் போஸ்டர்!

Date:

எம்.ஜி.ஆர்- சிவாஜி, ரஜினி- கமல் ஆகிய ஹீரோக்களின் வரிசையில் நடிகர்களான விஜய்- அஜித் திரையுலகில் முன்னணில் இருந்த காலக்கட்டத்தில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் திரைக்கு வருவதும் ரசிகர்கள் கொண்டாடுவதும் வழக்கத்தில் இருந்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய், ’தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கிய பிறகு திரையுலகை விட்டு முற்றிலும் விலகினார். இந்த நிலையில், கடந்த 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை இடங்களை வென்றது.

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றார். இந்த நிலையில், அஜித் ரசிகர்கள் தங்களது ‘தல’யும் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் அவ்வப்போது தங்களின் விருப்பத்தைத் தெரிவித்து வந்தனர்… வருகின்றனர். சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற கார் பந்தயத்தை விஜய் தொடக்கி வைத்தார். அப்போது இருவரும் கட்டியணைத்து கைகளை உயர்த்தி ‘போஸ்’ கொடுத்தனர். இது விஜய், அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியில் அஜித் ரசிகர் மன்றத்தினர் ‘தமிழக மக்கள் கழகம்’ என்ற கட்சியையும், இரண்டாவது கட்சியாக காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் ’அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியையும் தொடங்கியுள்ளனர். வரும் 2031-ம் ஆண்டுக்குள் அஜித்தை முதல்வராக்குவதே இலக்கு எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் லண்டனில் விஜய்-அஜித் இருவரும் போஸ் கொடுத்த படத்தைப் போட்டு அதில், `இடைத்தேர்தல் வெற்றி; இணைந்த கைகள் வெற்றி’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

அஜித் – விஜய்

இது அஜித் ரசிகர்களிடையே கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த போஸ்டர்கள் குறித்து தூத்துக்குடி சண்முகபுரம் லக்கி ஸ்டார் அஜித் நற்பணி மன்றம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்… அதன் தலைவர் மாடசாமி, `நடிகர் அஜித் பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது பெயரையோ, ரசிகர்களையோ எந்தவொரு அரசியல் பயன்பாட்டிற்கும் பயன்படுத்த வேண்டாம் என்ற நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தல அவர்களின் புகைப்படத்தைப் பயன்படுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பின்னணியில் ‘இடைத்தேர்தல் வெற்றி’ போன்ற வாசகங்களுடன் தூத்துக்குடியில் ஒட்டப்பட்டுள்ள விளம்பர போஸ்டர், அஜித் ரசிகர்கள் மத்தியில் மன வேதனையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அஜித் அவர்கள் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாக இருப்பதாக அறிவிக்கவில்லை.

தூத்துக்குடி அஜித் நற்பணி மன்றத்தின் அறிக்கை

இந்த நிலையில், அவரது புகைப்படம் மற்றும் ரசிகர்களின் உணர்வுகளை அரசியல் பிரசாரத்துடன் தொடர்புபடுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. அஜித் அவர்களின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும், அரசியல் சார்பற்ற நிலைப்பாட்டை உணர்ந்து மதித்து செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சிபிஐ-க்கு அவகாசம்; `ஜாமீன்' இடைக்காலத் தடை நீடிப்பு: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த கே.ஆம்ஸ்ட்ராங் படுகொலை...

பாலியல் வழக்கு; “தவெகவினருக்காக மட்டும் 'Compromise' செய்துகொள்கிறாரா முதல்வர்?" – டிடிவி தினகரன்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் அடுத்தடுத்து சிக்கும் தவெக நிர்வாகிகள்...

GEM வீரமணி வழக்கு: “அரசியல்வாதிகளையும் காவல்துறையையும் விசாரிக்க வேண்டும்" – அண்ணாமலை வலியுறுத்தல்

GEM கிரானைட்ஸ் உரிமையாலர் வீரமணி மீதான போக்சோ வழக்கில் ஆரம்பத்தில் தமிழ்நாடு...

தாராபுரம்: `விருப்பப்பட்டவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்..!' – ஆவேசமான நிர்வாகிகள்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6- ம்...