5
September, 2026

A News 365Times Venture

5
Saturday
September, 2026

A News 365Times Venture

"Excellent, சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை..!"- சௌமியா அன்புமணியைப் பாராட்டிய கமல்ஹாசன்

Date:

பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணியை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டி இருக்கிறார்.

சட்டமன்றத்தில் மக்களின் பிரச்னைகளைச் சரியான தரவுகளோடு சௌமியா அன்புமணி பேசி வருகிறார். பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று துணை சபாநாயகர் ரவிசங்கரும் சட்டமன்றத்தில், “வரலாற்று சிறப்புமிக்க இந்தப் பேரவையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி இந்த அவையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்?

சௌமியா அன்புமணி

அந்த 10 நிமிடங்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? தன்னுடைய தொகுதி மக்களுக்கு என்னென்ன சொல்ல வேண்டும் என்பதை செளமியா அன்புமணியிடம் இருந்து நாம் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்.

தேவையில்லாத சர்ச்சைகள், தேவையில்லாத இடைச்சொற்கள் இதெல்லாம் இல்லாமல் முழுக்க முழுக்க 100 சதவீதம் சமூதாய ரீதியாகதான் அவர் பேசுகிறார்” என்று செளமியா அன்புமணியைப் பாராட்டி பேசியிருந்தார்.

தற்போது நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டி இருக்கிறார்.

செளமியா அன்புமணி
செளமியா அன்புமணி

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “Excellent. சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை மிகச் சரியாகவும், துல்லியமான தகவல்களோடும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் சகோதரி சௌமியா அன்புமணி அவர்களைப் பாராட்டுகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பட்டா வழங்குவதாக மலைவாழ் மக்களிடம் ரூ.1 கோடி லஞ்சம்? – வனத்துறை அலுவலர்கள் 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதிகளான ஜமுனாமரத்தூர், மேல்மட்டு, நாடனூர் உள்ளிட்ட...

சட்டசபை நிகழ்ச்சிகளைப் பதிவு செய்ய கண்ணாடியில் AI கேமராவா? – அமைச்சர் முகமது பர்வேஸ் விளக்கம்

தமிழ்நாட்டு அமைச்சரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும்,...

'வெடி சத்தம் மட்டுமே; புகையும் இல்லை; தீயும் இல்லை' – ஈரானின் Kharg தீவை மீண்டும் தாக்கிய அமெரிக்கா?

ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லி...

KN நேரு வீட்டில் சோதனை: "நேருவைப் பழிவாங்க பார்க்கிறார்கள்; பணிந்து போகாது திமுக" – கனிமொழி

முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ-வுமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் வீட்டில் இன்று...