26
July, 2026

A News 365Times Venture

26
Sunday
July, 2026

A News 365Times Venture

"தர்மேந்திர பிரதான் தேசியக் கல்விக் கொள்கையைச் சிறப்பாகச் செயல்படுத்தினார்" – பிரகலாத் ஜோஷி

Date:

நீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து இளைஞர்களின் தொடர் போராட்டம் காரணமாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்ட நிலையில், மத்திய உணவு வழங்கல் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தர்மேந்திர பிரதான்

இந்நிலையில் புதிதாக கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

“மத்திய கல்வித் துறை அமைச்சர் பொறுப்பைத் தன்னடக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறேன். பிரதமர் மோடிக்கு நன்றி. இந்தியா கல்வித்துறையில் பல முன்னேற்றங்களை அடைந்திருக்கிறது. பிரதமரின் வழிகாட்டுதலுடன் சிறப்பாகச் செயல்படுவேன்.

பிரதமர் என் மீது நம்பிக்கை வைத்து இத்தகைய ஒரு முக்கிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார். நான் நேர்மையாகப் பணியாற்றி இந்தத் துறையில் அவரது எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன்.

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் தர்மேந்திர பிரதானும் புதிய தேசியக் கல்விக் கொள்கை திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தினார். புதிய கல்வி முறையில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கரப்பான் பூச்சி: “என் பேச்சு தவறாகத் திரிக்கப்பட்டுவிட்டது" – தலைமை நீதிபதி சூர்யா காந்த் விளக்கம்

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை...

"மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் எப்படி?"- மெட்ரோ ரயில் நிராகரிப்புக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்திருப்பதற்கு தமிழக...

'மெரினா, விஜய், ஆளுநர்..' கடும் வாக்குவாதத்தில் முடிந்த பாலன் இல்ல போராட்டம்? – பின்னணி என்ன?

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்துக்கு ஆதரவாக தி.நகர் பாலன் இல்லத்தில் கடந்த...

சர்வதேச மீடியாவின் கவனத்தை ஈர்த்த போராட்டம்; பிரதானை இழக்க பாஜக சம்மதிக்கக் காரணமான 72 மணிநேர கெடு

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்திய...