26
July, 2026

A News 365Times Venture

26
Sunday
July, 2026

A News 365Times Venture

"மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் எப்படி?"- மெட்ரோ ரயில் நிராகரிப்புக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

Date:

கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்திருப்பதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை என்றும் மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைவதால் பயண நேரம் குறைய வாய்ப்பில்லை என்றும் இரண்டாவது முறையாக மத்திய அரசு கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்திருக்கிறது.

சென்னை மெட்ரோ

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டிருக்கும் பதிவில்,”

மோடி அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

ஒவ்வொரு ஆண்டும் கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களை நிராகரிக்க அதே பழைய ரீலைத் தான் சுற்றுகிறார்கள்… எந்த மாற்றமும் இல்லை!

இதுதான் பழைய ரீல்:

1. பழைய கணக்கெடுப்பு சாக்கு: 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல், 14 ஆண்டுகள் பழமையான 2011 கணக்கீட்டைப் (கோவை 15.84 லட்சம், மதுரை 15 லட்சம்) பிடித்துக்கொண்டு 20 லட்சம் மக்கள் தொகை இல்லை எனத் திட்டம் நிராகரிக்கப்படுகிறது.

2. இரட்டை நிலைப்பாடு: ஆக்ரா, போபால், பாட்னா, இந்தூர் போன்ற நகரங்களுக்கு மெட்ரோ வழங்கிவிட்டு, தென்னகத்தின் முக்கியத் தொழில் மற்றும் சுற்றுலா நகரங்களான கோவை & மதுரைக்கு மட்டும் BRTS-ஆ?

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

3. வளர்ச்சிப் புறக்கணிப்பு: மிதக்கும் மக்கள் தொகை (Floating Population) மற்றும் நகர்ப்புற அதிவேக வளர்ச்சியை முற்றிலுமாக புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்?

பழைய தரவுகளைக் காட்டி தமிழக நகரங்களின் வளர்ச்சியைத் தடுப்பதை நிறுத்துங்கள்!

கோவை மற்றும் மதுரைக்கு உடனடியாக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிடுக!” என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கரப்பான் பூச்சி: “என் பேச்சு தவறாகத் திரிக்கப்பட்டுவிட்டது" – தலைமை நீதிபதி சூர்யா காந்த் விளக்கம்

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை...

'மெரினா, விஜய், ஆளுநர்..' கடும் வாக்குவாதத்தில் முடிந்த பாலன் இல்ல போராட்டம்? – பின்னணி என்ன?

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்துக்கு ஆதரவாக தி.நகர் பாலன் இல்லத்தில் கடந்த...

சர்வதேச மீடியாவின் கவனத்தை ஈர்த்த போராட்டம்; பிரதானை இழக்க பாஜக சம்மதிக்கக் காரணமான 72 மணிநேர கெடு

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்திய...

Zoho: “நான் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறேனா?'' – கொந்தளிக்கும் ஸ்ரீதர் வேம்பு

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை...