26
July, 2026

A News 365Times Venture

26
Sunday
July, 2026

A News 365Times Venture

Pralhad Joshi: RSS பின்புலம்; பல முறை எம்.பி; கல்வித்துறைக்குப் பொறுப்பேற்கும் பிரகலாத் ஜோஷி யார்?

Date:

நீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து இளைஞர்களின் தொடர் போராட்டம் காரணமாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டமும் கைவிடப்பட்டது. இந்நிலையில் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்ட நிலையில், மத்திய உணவு வழங்கல் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தர்மேந்திர பிரதான்

யார் இந்த பிரகலாத் ஜோஷி?

பிரகலாத் ஜோஷி 1962-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுராவில் பிறந்தவர். ஸ்ரீ காதாசித்தேஸ்வரா கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், இளமைப் பருவத்திலேயே ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்துடன் (RSS) இணைந்தார். பின்னர் பாஜக-வின் தீவிர அரசியல் களத்திற்குள் நுழைந்தார்.

கர்நாடக மாநில அரசியலில் வலுவான தலைவர்களில் ஒருவராகத் திகழும் இவர், தார்வாடு மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.

கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகப் பணியாற்றி, மாநிலத்தில் கட்சியைக் கட்டியெழுப்பியதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்.

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

மோடி தலைமையிலான அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

தற்போது, நிர்வாகத்தில் இருக்கும் நீண்ட அனுபவம் மற்றும் திறமையான கையாளுதல் திறனைக் கருத்தில் கொண்டு, இவருக்குக் கல்வித் துறையின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'மெரினா, விஜய், ஆளுநர்..' கடும் வாக்குவாதத்தில் முடிந்த பாலன் இல்ல போராட்டம்? – பின்னணி என்ன?

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்துக்கு ஆதரவாக தி.நகர் பாலன் இல்லத்தில் கடந்த...

சர்வதேச மீடியாவின் கவனத்தை ஈர்த்த போராட்டம்; பிரதானை இழக்க பாஜக சம்மதிக்கக் காரணமான 72 மணிநேர கெடு

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்திய...

Zoho: “நான் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறேனா?'' – கொந்தளிக்கும் ஸ்ரீதர் வேம்பு

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை...

காஞ்சிபுரம்: குப்பைக் கிடங்காக மாறிய பஞ்சுப்பேட்டை சாலை; கண்டுகொள்ளாத மாநகராட்சி

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பஞ்சுப்பேட்டை சாலை எப்போதும் பரபரப்பாக...