11
June, 2026

A News 365Times Venture

11
Thursday
June, 2026

A News 365Times Venture

'234 மாவட்டச் செயலாளர்கள்; முதற்கட்டமாக 9 மாவட்டங்களில் பரிசோதனை முயற்சி!'- விஜய்யின் அடுத்த பிளான்!

Date:

தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல் முதலாக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது தவெக. எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் சர்ப்ரைஸாக சில முடிவுகளும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

தவெக நிர்வாகிகள் கூட்டம்

நிர்வாகிகள் கூட்டத்தில் என்னவெல்லாம் ஆலோசிக்கப்பட்டது என சில மா.செக்களிடம் பேச்சுக்கொடுத்தோம். ‘முதலில் பொதுச்செயலாளர் ஆனந்த்தான் பேசினார்.

‘மாவட்டச் செயலாளர்களுக்கு எப்போதும் போல உரிய மரியாதை கிடைக்கும். உங்கள் மாவட்டம் உங்கள் பொறுப்புதான். உங்களுக்கு கட்சிரீதியாக எதாவது பிரச்னை என்றால் என்னிடம் வாருங்கள். வேறு எம்.எல்.ஏக்களிடமோ அமைச்சர்களிடமோ பஞ்சாயத்துக்காக செல்லாதீர்கள். வழக்கம் போல என்னிடமே வந்து புகார் கொடுங்கள்.

உங்கள் மாவட்டத்தில் உங்களுக்கு சீட் கிடைக்காமல் போய் வேறொருவர் எம்.எல்.ஏ ஆகியிருக்கலாம். மாற்றுக்கட்சியிலிருந்து சிலர் உள்ளே வரலாம். ஆனாலும் உங்களுக்கு தளபதியின் மனதில் தனி இடம் உண்டு.

உங்களை சந்திக்க நிறைய பேர் வருவார்கள். அதை செய்து கொடுங்கள், இதை செய்து கொடுங்கள் என பணத்தை திணிப்பார்கள். அப்படி எங்கேயும் கை நீட்டி விடாதீர்கள். ஒரு மாத காலமாக நாம் ஊழலற்ற க்ளீன் கவர்மெண்டை நடத்தி வருகிறோம். நீங்கள் பணத்தை வாங்கி வந்தாலும் எந்த அமைச்சரும் உங்களிடம் கமிஷன் வாங்கமாட்டார்கள். நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்கு பாத்திரமாக நடந்துகொள்ளுங்கள்.

புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த்

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தலைமைச் செயலகம் வரலாம். அமைச்சர்களை சந்திக்கலாம். ஆனால், உங்களுடன் சிபாரிசுக்காக யாரையும் அழைத்து வராதீர்கள்’ எனக் கறாராக கூறினார்.

அடுத்ததாக பேசிய ஆதவ் அர்ஜூனா, ‘எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என மூன்று தரப்பும் எந்த முரணும் இல்லாமல் இணைந்து செயல்பட வேண்டும். லோக்கலில் நம்முடைய பெயர் கெட்டுவிடக்கூடாது. ஒயின் ஷாப் பார் லைசன்ஸ் எடுக்கிறேன், போலீஸ் ஸ்டேசனில் போய் கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்ற எந்த வேலையையும் செய்துவிடக்கூடாது. உங்களுக்கு என்ன பிரச்னையாக இருந்தாலும் தலைமைக்கு தெரியப்படுத்துங்கள். நாங்களே சுமுகமாக முடித்துத் தருகிறோம். ஆயுசு உள்ள வரை தளபதிதான் முதல்வர். நாமெல்லாம் இணைந்து நல்ல ஆட்சியை கொடுப்போம் என்றார்’ என்கின்றனர் மா.செக்கள்.

இதன்பிறகுதான் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் சில முக்கியமான விஷயங்களை ஆனந்த் பேசியிருக்கிறார். அதாவது இப்போது வரை தவெகவில் 132 மா.செக்கள் இருக்கிறார்கள். தொகுதிக்கு 1 மாவட்டச் செயலாளர் என்ற எண்ணிக்கையில் மா.செக்களை அதிகரிக்க இருக்கிறார்களாம். இதில் மாவட்டச் செயலாளர்களாக இல்லாத எம்.எல்.ஏக்களை மா.செக்களாக ஆக்கும் முடிவில் இருக்கிறார்களாம். மாற்றுக்கட்சியினரையும் கவனிக்கவிருக்கிறார்களாம். இந்தத் திட்டத்தை முதல்கட்டமாக கட்சி வீக்காக இருக்கும் 9 மாவட்டங்களில் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம். அதற்கான அறிவிப்பை கட்சித் தலைவரான விஜய் இன்னும் ஒரு வாரத்தில் அறிவிப்பார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

TVK Vijay - தவெக விஜய்
TVK Vijay – தவெக விஜய்

மேலும், தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கும் மா.செக்களுக்கும் வாரியம் போன்ற நியமன பதவிகளை கொடுக்கவும் முடிவெடுத்துவிட்டார்கள். அதற்கான அறிவிப்பு ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளிவரும் என தெரிகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`தளபதி படம் பார்ப்பீங்களா?’ – அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுத்து ரீல்ஸ் போட்ட தவெக நிர்வாகி!

விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில், சுமார்...

“KG படிக்கும் குழந்தை பேசுவதைப் போல…" – திமுக-வை சாடும் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்!

தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தவெக அரசால் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் மேலிடப் பொருப்பாளர்...

மயிலாடுதுறை: `ஓப்பன் பார்'ஆக மாறிய பஸ் ஸ்டாப்; அச்சத்தில் மக்கள்… நடவடிக்கை எடுக்குமா அரசு?!

மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு கடைவீதி பகுதியில் மதுபானக்கடை ஒன்று, சுமார் ஒன்பது...