10
June, 2026

A News 365Times Venture

10
Wednesday
June, 2026

A News 365Times Venture

'வெளிச்சம் டிவியை கட்டியெழுப்பியது யார்?' – சீண்டிக்கொள்ளும் சிறுத்தைகள்!

Date:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊடகப்பிரிவு முதன்மைச் செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு சமீபத்தில் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்திருந்தார். விசிகவின் அதிகாரப்பூர்வ சேனலான ‘வெளிச்சம் டிவி’ யை பனையூர் பாபுதான் நிர்வகித்து வந்தார். அவர் கட்சியிலிருந்து விலகியதால் வெளிச்சம் டிவி யாருடைய கட்டுப்பாட்டில் யாருக்காக இயங்கும் என்கிற கேள்வி எழுந்தது.

பனையூர் பாபு

வெளிச்சம் டிவி உரிமம் தொடர்பாக பனையூர் பாபு தரப்பும் விசிக தரப்பும் மாறி மாறி கருத்துகளை பேசி வருவதால் சிறுத்தைகள் கொந்தளித்துப் போய் இருக்கின்றனர்.

இதுதொடர்பாக நேற்று பேசிய விசிகவின் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி, ‘பனையூர் பாபுவின் முயற்சியால் வெளிச்சம் டிவி தொடங்கப்பட்ட் பிறகுதான் விசிகவின் செய்திகள் கவனம் பெற்றதாக அவரே கூறிக்கொள்கிறார்.

ஆனால், 2010-11 காலக்கட்டத்திலேயே விசிகவுக்கென ஒரு ஊடகம் தேவை எனவும் அதை தொடங்குவதற்கான முயற்சிகளிலும் திருமா இறங்கினார். நிறைய பேரின் பங்களிப்பை திருமா நாடினார். திருமா மற்றும் கோவிந்தராஜ் என்பவரால் மருதம் என்கிற நிறுவனம் 2011 இல் தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் பெயரில்தான் 2016 இல் வெளிச்சம் டிவி தொடங்கப்பட்டது. பனையூர் பாபு கேபிளிலில் வேலை பார்த்த அனுபவம் இருந்ததால் அவர் இந்த தொலைக்காட்சி சம்பந்தமான விவகாரங்களை பார்த்துக் கொண்டார். கட்டிடம் கட்ட கூட இருந்து உதவியதற்காக கட்டிடமே என்னுடையது என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?’ எனப் பேசியிருந்தார்.

எஸ் எஸ் பாலாஜி
எஸ் எஸ் பாலாஜி

எஸ்.எஸ்.பாலாஜியின் குற்றச்சாட்டுகளை மறுத்து பேசியிருந்த பனையூர் பாபு, ‘வெளிச்சம் தொலைக்காட்சியை 2016 இல் வாடகை லைசன்ஸ் வாங்கியே தொடங்கினோம். சேனலில் நாங்கள் பாஜகவை கடுமையாக விமர்சித்த போது லைசன்ஸின் உரிமையாளர் லைசன்ஸ் கொடுக்க முடியாது என்றார். அப்போது என்னுடைய பணத்தை முதலீடு செய்து சொந்தமாக லைசன்ஸ் வாங்கினேன். காலையிலிருந்து இரவு வரைக்கும் சேனல் ஆபிஸில் மட்டுமேதான் இருப்பேன். மருதம் நிறுவனத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என பாலாஜி கூறுகிறார். அந்த நிறுவனத்தில் 40% பங்கு என்னுடையது. இது எனக்கும் திருமாவுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை. எஸ்.எஸ்.பாலாஜி திருமாவுக்கு தெரிந்து பேசுகிறாரா இல்லையா என்றே தெரியவில்லை.

திருமாவளவன் – பனையூர் பாபு

தேர்தல் தேதி அறிவிப்பிலிருந்து இப்போது வரை திருமாவுடன் பேசவில்லை. ஆனாலும் இந்த சேனலும் இந்த லைசன்ஸூம் திருமாவுக்காகவே தொடரும் என்பதில் மாற்றமே இல்லை’ என்றார்.

‘வெளிச்சம் டிவி தொடர்பான கருத்து மோதல்களால் சிறுத்தைகள் கொதித்துப் போயிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

3 செய்தி தொலைக்காட்சிகள் அரசு கேபிளில் இருந்து நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனம்: அரசு விளக்கம்

செய்தி தொலைக்காட்சிகள் தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகச் ...

"ஊழல் குறைந்திருக்கிறது; தற்போதைய மின்வெட்டுக்கு திமுக ஆட்சியே காரணம்!" – முதல்வரை சந்தித்த அன்புமணி

முதல்வர் விஜய்யை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமைச் செயலகம் சென்று...

அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக மா. செ; வெடித்த கோஷ்டி மோதல்; பேசுபொருளான அமைச்சரின் திண்டுக்கல் விசிட்!

திண்டுக்கல் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மதுவிலக்கு ஆயர்த்தீர்வை அமைச்சர் விக்னேஷ்,...

சிங்கப்பெண் அதிரடிப்படை: 'பெண்களை தொந்தரவு செய்தால் சகித்துக்கொள்ள மாட்டேன்'- முதல்வர் விஜய்

சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் இன்று (ஜூன்.9) தொடங்கி வைத்திருக்கிறார்....