9
June, 2026

A News 365Times Venture

9
Tuesday
June, 2026

A News 365Times Venture

சிங்கப்பெண் அதிரடிப்படை: 'பெண்களை தொந்தரவு செய்தால் சகித்துக்கொள்ள மாட்டேன்'- முதல்வர் விஜய்

Date:

சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் இன்று (ஜூன்.9) தொடங்கி வைத்திருக்கிறார்.

இதன் துவக்க விழாவில் பேசிய முதல்வர் விஜய், ” ஒரு சில நிகழ்ச்சி மட்டும்தான் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். அந்தவகையில் இது என் மனதுக்கு நெருக்கமான நிகழ்ச்சி. நம் வீட்டில் அம்மா, அக்கா, பாட்டி என ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பும் முக்கியம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பார்க்கும்போது மனம் வலிக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவோம். பெண்களின் பாதுகாப்பிற்கு போதை ஒழிப்பு முக்கியம். போதையை அகற்ற வேண்டும்.

பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விட்டதால் தான் போதைப்பொருள் நடமாட்டம் பரவி விட்டது. பெண்களை தொந்தரவு செய்தால் சகித்துக்கொள்ள மாட்டேன். குற்றவாளிகளுக்கு விரைவாகத் தண்டனை பெற்று தர வேண்டும். பெண்களுக்கான கண்ணியம் உச்சபட்ச முன்னுரிமை.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க நாட்டில் முதலாவதாக ட்ரோன்கள் வாயிலாக ரோந்து நடைபெற இருக்கிறது. பெண்களும், குழந்தைகளும் மரியாதையாக வாழ்கிறார்களா என்பதில் தான் ஒரு அரசின் வெற்றி உள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தனிமனித ஒழுக்கம் சரியாக இருந்தால் நம் சமூகம் மாறும். பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும். இந்த சிங்கப்பெண் அதிரடி படைத் திட்டம் தொடங்க காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக மா. செ; வெடித்த கோஷ்டி மோதல்; பேசுபொருளான அமைச்சரின் திண்டுக்கல் விசிட்!

திண்டுக்கல் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மதுவிலக்கு ஆயர்த்தீர்வை அமைச்சர் விக்னேஷ்,...

தொகுதி மறுவரையறை: மம்தா கட்சிக்குள் கலகம்! 3-ல் 2 பங்கு பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக அரசு?

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவு,...

நெஞ்சை உலுக்கும் சோகம்: குடும்பத்தினர் 8 பேர் தீயில் கருகி இறந்ததை அறியாமலேயே முதியவர் மரணம்!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராதே ஷியாம் அகர்வால் கடுமையான இதய நோய்...