14
November, 2026

A News 365Times Venture

14
Saturday
November, 2026

A News 365Times Venture

வீடு புகுந்து திருடிய வழக்கு; கைதான குற்றவாளி மீது குண்டர் சட்டம்; கரூர் போலீஸ் அதிரடி

Date:

கரூர் மாவட்டம், கரூர் நகர உட்கோட்டம், கரூர் நகர காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஆத்தூர் புதூரில் வசித்து வரும் ராஜ்குமார் என்பவர் தனது மனைவியுடன் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.

அப்போது, அவரது வீட்டிற்குள் புகுந்து நான்கரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.1,30,000 என மொத்தம் ரூ.1,96,000 மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டது சம்மந்தமாக, கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் சம்பவ இடத்தில் கிடைக்கபெற்ற CCTV பதிவுகளைக் கொண்டு ஆராய்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய மணிவண்ணன் (வயது: 24) என்பவரைக் கைது செய்தனர். இவர், சிவகங்கை மாவட்டம், கிழவணியங்குடி என்ற பகுதியைச் சேர்ந்தவர் என்பது போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், திருட்டு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இவரை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசன்னா ராமசாமி உத்தரவின்படி நேற்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

karur

மேலும், “கரூர் மாவட்டத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள். தனியாக விரிவாக்கப் பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளில் CCTV Camera பொருத்த வேண்டும்” எனக் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரகுபதி பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மீண்டும் ஒரு காவல் மரணம்: “தவெக அரசின் ஏவல் துறையாக மாறியுள்ளது காவல்துறை" – டிடிவி தினகரன்

மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட தேனி...

மேகதாது விவகாரம்: “தமிழகத் தலைவர்களின் எதிர்ப்பைப் பற்றிக் கவலையில்லை" – கர்நாடக முதல்வர்

கர்நாடக மாநிலம் மைசூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கர்நாடகா...

“சட்டமன்றத் தேர்தலில் திமுக எங்களுக்கு எதிராக உள்ளடி வேலை செய்தது" – திருநாவுக்கரசு குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சி எவ்வாறு திமுக ஆட்சியைக் கவிழ்த்ததோ, அதேபோல தவெக அரசையும்...

ஆபாச மெசேஜ்: "தவெக எம்எல்ஏ மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்" – அரசு ஊழியர் சங்கம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட அலுவலகத்தில் நிகழ்ச்சி ஒன்றில்...