14
November, 2026

A News 365Times Venture

14
Saturday
November, 2026

A News 365Times Venture

மீண்டும் ஒரு காவல் மரணம்: “தவெக அரசின் ஏவல் துறையாக மாறியுள்ளது காவல்துறை" – டிடிவி தினகரன்

Date:

மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர், சந்தேகத்திற்குரிய வகையில் காவல் நிலையத்திலேயே உயிரிழந்த விவகாரம் விவாதமாகியிருக்கிறது. இது தொடர்பாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில், “தவெக ஆட்சியில் மேலும் ஒரு காவல் மரணம் – காவல் நிலையங்களே மரணக் கூடங்களாக மாறுகின்றனவா? அடுத்தடுத்து அரங்கேறும் காவல் மரணங்களுக்கு யார் பொறுப்பு? மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர், சந்தேகத்திற்குரிய வகையில் காவல் நிலையத்திலேயே உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

முதல்வர் விஜய்

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாதங்களில் அடுத்தடுத்து அரங்கேறிய ஆறு-க்கும் மேற்பட்ட காவல் மரணங்களின் தொடர்ச்சியாகவே இச்சம்பவமும் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், உயிரிழந்தவரின் உறவினர்கள், இம்மரணம் குறித்த உண்மை நிலையை விளக்கக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மற்றும் போதைப்பொருட்களின் தாராளப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ள தவெக அரசின் ஏவல் துறையாகக் காவல்துறை மாறியுள்ள நிலையில், சந்தேகத்திற்குரிய இம்மரணம் குறித்த செய்தி வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியிருப்பதும், செக்கானூரணி காவல் நிலையக் காவல் ஆய்வாளரைப் பணியிடைநீக்கம் செய்திருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

காவல் நிலையங்களுக்குப் புகார் அளிக்க வரும் பொதுமக்களை அவமதிக்கும் வகையில் பேசுவது, தரக்குறைவாக நடத்துவது, மிரட்டி ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுமாறு அச்சுறுத்துவது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது எனத் தங்களுக்கான பொறுப்புணர்வையும் கட்டுப்பாட்டையும் மறந்து, அரக்கத்தனமாகச் செயல்படும் ஒரு சில காவலர்களால் ஒட்டுமொத்தக் காவல்துறையின் மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, செக்கானூரணி காவல் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நடைபெற்றுள்ள மரணம் குறித்து விரிவான மற்றும் நேர்மையான விசாரணை நடத்தி, உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டு வருவதோடு, புகார் அளிக்க வருபவர்களாக இருந்தாலும், விசாரணைக்காக அழைத்து வரப்படுபவர்களாக இருந்தாலும், அனைவரையும் மனித மாண்புடன் நடத்த வேண்டும் எனத் தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிட வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

வீடு புகுந்து திருடிய வழக்கு; கைதான குற்றவாளி மீது குண்டர் சட்டம்; கரூர் போலீஸ் அதிரடி

கரூர் மாவட்டம், கரூர் நகர உட்கோட்டம், கரூர் நகர காவல் நிலைய...

மேகதாது விவகாரம்: “தமிழகத் தலைவர்களின் எதிர்ப்பைப் பற்றிக் கவலையில்லை" – கர்நாடக முதல்வர்

கர்நாடக மாநிலம் மைசூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கர்நாடகா...

“சட்டமன்றத் தேர்தலில் திமுக எங்களுக்கு எதிராக உள்ளடி வேலை செய்தது" – திருநாவுக்கரசு குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சி எவ்வாறு திமுக ஆட்சியைக் கவிழ்த்ததோ, அதேபோல தவெக அரசையும்...

ஆபாச மெசேஜ்: "தவெக எம்எல்ஏ மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்" – அரசு ஊழியர் சங்கம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட அலுவலகத்தில் நிகழ்ச்சி ஒன்றில்...