25
May, 2026

A News 365Times Venture

25
Monday
May, 2026

A News 365Times Venture

விஷக் கடியால் உயிரிழந்த சிறுமி; ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் – என்ன நடந்தது?

Date:

தென்காசி மாவட்டம், இந்த சிவகிரி அருகே உள்ள தென்மலையை சேர்ந்தவர் சுப கார்த்திகா (வயது 9). இவர் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு காலில் ஏதோ அடிபட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அடிபட்ட இடத்தில் சுப கார்த்திகாவுக்கு இரவில் வீக்கமும், வலியும் ஏற்படவே தனக்கு காயம் ஏற்பட்டதை வீட்டில் பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

போராட்டம்

இதைக்கவனித்த உறவினர்கள், ஏதேனும் விஷ கடியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சுப கார்த்திகாவை தென்மலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர், உடனடியாக சிறுமியை சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிகிச்சைக்காக, சிவகிரி நோக்கி டூவீலரில் அழைத்துச் செல்லும் வழியில் சிறுமி சுப கார்த்திகா உயிரிழந்தார். சிறுமி உயிரிழந்ததையடுத்து ஆத்திரமடைந்த அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தென்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

முற்றுகை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாசுதேவநல்லூர் போலீஸார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சிறுமியின் உறவினர்கள், “சுப கார்த்திகாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு கொண்டுவந்த பிறகும் கூட சிறுமியை தொட்டு அவளுக்கு என்ன பிரச்னை என்பதை செவிலியர் பார்க்கவில்லை. மாறாக எந்த முதலுதவி சிகிச்சையும் அளிக்காமல் சிவகிரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். இரவு நேரத்தில் இங்கு டாக்டர்கள் யாரும் பணியில் இல்லை. அதுபோல விஷ முறிவுக்கான மருந்துகளும் கிடையாது, ஆகவே இங்கிருந்து வெளியேறி சிவகிரி மருத்துவமனைக்கு செல்லுங்கள் என விரட்டியடித்தார். சிறுமியை, மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதிகூட செய்துதரவில்லை.

இந்த நிலையில் நாங்களே எங்களின் குழந்தையை டூ-வீலரில் சிகிச்சைக்காக அழைத்து சென்றோம். அப்போதுதான் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். சிறுமி உயிரிழந்ததற்கு தென்மலை மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இல்லாததும், முதலுதவி சிகிச்சை அளிக்காததுமே காரணம். ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினர். இதையடுத்து பேசிய போலீஸார், “சிறுமி உயிரிழந்ததற்கான உண்மையான காரணம் தெரியவந்த பின்பு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினர். இதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பேச்சுவார்த்தை

சம்பவம் தொடர்பாக தென்காசி மருத்துவ பணிகள் துணை இயக்குநர் கோவிந்தனிடம் விளக்கம் கேட்டோம். அப்போது அவர், “தென்மலையில் செயல்படுவது கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இரவு நேரத்தில் கூடுதல் மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை. அதுபோல ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து, அதன் பின் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குச் சென்று அங்கிருந்து சிறுமியை சிவகிரி அழைத்து வருவதற்கு மேலும் அதிகம் நேரம் விரயமாகும் என்பதால் சிறுமி சுப கார்த்திகாவை சிவகிரி மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்ல செவிலியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் தென்காசி மாவட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளிலுமே விஷ முறிவுக்கான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. சிறுமி சுப கார்த்திகா இறந்த சம்பவத்தில் அவரின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு அறிக்கை வந்த பின்பே உண்மையான காரணம் வெளிப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தென்மலையில் நடந்த போராட்டம் மற்றும் மருத்துவமனை செவிலியர் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு | 77-வது நாளில் தீர்ப்பு

தூத்துக்குடியில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலால்...

வெறும் 11 நாள்களில், பெட்ரோல், டீசல் விலை நான்கு முறை உயர்வு; கிட்டத்தட்ட ரூ.7 உயர்ந்தது!|Timeline

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் போர் தொடங்கியது. அன்றிலிருந்தே சர்வதேச...

"பின்வாசல் வழியாக பதவியில் ஒட்டிக்கொண்டீர்கள்" – மாணிக்கம் தாகூருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தூத்துக்குடியில் இன்று...

விழுப்புரம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 'வீர வசனம் என்ன ஆனது?'- முதல்வர் விஜய்க்கு டிடிவி கேள்வி

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல்...