25
May, 2026

A News 365Times Venture

25
Monday
May, 2026

A News 365Times Venture

வெறும் 11 நாள்களில், பெட்ரோல், டீசல் விலை நான்கு முறை உயர்வு; கிட்டத்தட்ட ரூ.7 உயர்ந்தது!|Timeline

Date:

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் போர் தொடங்கியது.

அன்றிலிருந்தே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்படவில்லை.

கடைசியாக, 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை, கடந்த மே 15-ம் தேதி வரைக்குமே அப்படியே தொடர்ந்தது.

பெட்ரோல், டீசல்

ஏன் விலை உயர்வு?

ஈரான் போரினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மிகவும் உயர்ந்தது. ஆனால், அதற்கேற்ற மாதிரி, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

இதனால், தரவுகளின் படி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆகிய மூன்று நிறுவனங்களும் மொத்தமாக ஒவ்வொரு நாளும் ரூ.1,000 கோடி அளவிற்கு நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளன.

இந்த நஷ்டத்தைப் பாதி அளவு குறைக்கவே, தற்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது எண்ணெய் நிறுவனங்கள்.

நான்கு முறை

இந்திய அரசு கிட்டத்தட்ட 10 நாள்களில் மே 15, மே 19, மே 23, மே 25 என நான்கு முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது.

அப்படி சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எத்தனை ரூபாய் உயர்ந்துள்ளது என்கிற டைம்லைனை இங்கே பார்ப்போம்.

பெட்ரோல் விலை உயர்வு:

மே 15, 2026 – ரூ.103.67 (ரூ.2.87உயர்வு)

மே 19, 2026 – ரூ.104.49 (ரூ.0.82 உயர்வு)

மே 23, 2026 – ரூ.105.31 (ரூ.0.82 உயர்வு)

மே 25, 2026 – ரூ.107.77 (ரூ.2.46 உயர்வு)

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

டீசல் விலை உயர்வு:

மே 15, 2026 – ரூ.95.25 (ரூ.2.80 உயர்வு)

மே 19, 2026 – ரூ.96.11 (ரூ.0.86 உயர்வு)

மே 23, 2026 – ரூ.96.98 (ரூ.0.87 உயர்வு)

மே 25, 2026 – ரூ.99.55 (ரூ.2.57 உயர்வு)

கடந்த 11 நாள்களில், சென்னையில் பெட்ரோல் விலை ரூ.6.97 உயர்ந்துள்ளது… டீசல் விலை ரூ.7.1 உயர்ந்துள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"பின்வாசல் வழியாக பதவியில் ஒட்டிக்கொண்டீர்கள்" – மாணிக்கம் தாகூருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தூத்துக்குடியில் இன்று...

விழுப்புரம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 'வீர வசனம் என்ன ஆனது?'- முதல்வர் விஜய்க்கு டிடிவி கேள்வி

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல்...

'நோ' கொத்துக் கொத்தாகப் பணம்; 'நோ' அணு ஆயுதத் தயாரிப்பு! – ட்ரம்ப் சொல்லும் ஒப்பந்தத்தின் Outline

'ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது' என்று நேற்று முன்தினம்...

"கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா முதல்வர்களாக நடித்துள்ளேன்; ஆனால்…" – வி.டி.சதீசனை வாழ்த்திய மம்மூட்டி

கேரள ​முதலமைச்சர் வி.டி.சதீசனுக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கும்...