26
August, 2026

A News 365Times Venture

26
Wednesday
August, 2026

A News 365Times Venture

ரேஷன் அட்டையில் கைரேகை இன்னும் பதியவில்லையா? வருகிற சனிக்கிழமை சூப்பர் வாய்ப்பு!

Date:

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டைகளில் கைரேகை பதிந்திருக்க வேண்டும்.

இது குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களைச் சரிபார்ப்பதற்குத்தான் இந்த நடைமுறை.

ஒருவேளை, குடும்ப உறுப்பினர்களில் ஒருவரின் கைரேகை மிஸ் ஆனாலும், அவர்களது பெயர் ரேஷன் அட்டையில் நீக்கப்படலாம்.

இதனால், ரேஷன் அட்டைகளில் eKYC-ஐக் கட்டாயம் செய்து முடித்திருக்க வேண்டும்.

அரசின் தரவுகளின்படி, தமிழ்நாட்டில் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ரேஷன் அட்டைகளில் கைரேகை சரிபார்ப்பு நடந்து வருகிறது. இதுவரை 96.21 சதவிகிதம் மட்டுமே முடிந்துள்ளது.

ரேஷன் கடை

ஒருவேளை, நீங்களோ, உங்கள் குடும்ப உறுப்பினரோ, கைரேகை சரிபார்ப்பை மிஸ் செய்திருந்தால், சூப்பர் வாய்ப்பு காத்திருக்கிறது.

வருகிற சனிக்கிழமை (ஆகஸ்ட் 29), அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை எளிதாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ஒருவேளை, இதை இப்போதும் தவறவிட்டால், ரேஷன் அட்டையிலிருந்து உங்கள் பெயர் நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் கூட உள்ளன.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"சட்டமன்றத்தில் லாவணி கச்சேரி நடந்துக்கொண்டிருக்கிறது" – தவெக, திமுக-வை தாக்கும் பெ.சண்முகம்

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது,...

தேனி: ஆக்கிரமிப்பு பட்டியலில் பழங்குடி மக்கள்; நீதிமன்றத்தை ஏமாற்றியதாக வனத்துறை மீது குற்றச்சாட்டு?

மேகமலை வருஷநாடு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் கடந்த...

புதிதாக மின் இணைப்பு பெற, இனி வீட்டுக்கு அதிகாரிகள் வரமாட்டார்களா? – ஆகஸ்ட் 28 முதல் புதிய நடைமுறை!

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் அனைத்துத் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்களுக்குச் சுற்றறிக்கை...

"சோஃபா செட் இல்ல, லாக்கரே வந்தாலும்கூட தேமுதிக தன்னுடைய..!"- கூட்டணி மாறுவது குறித்து பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று (ஆகஸ்ட். 25) கடலூரில் நடைபெற்ற...