26
August, 2026

A News 365Times Venture

26
Wednesday
August, 2026

A News 365Times Venture

"சட்டமன்றத்தில் லாவணி கச்சேரி நடந்துக்கொண்டிருக்கிறது" – தவெக, திமுக-வை தாக்கும் பெ.சண்முகம்

Date:

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது, “தமிழ்நாடு சட்டப்பேரவையில் லாவணி கச்சேரி நடந்துக்கொண்டிருக்கிறது. மானியக் கோரிக்கை மீதான விவாதம் என்று சொல்லித்தான் விவாதத்தைத் தொடங்குகிறார்கள்.

சட்டமன்றம்

அந்த மானியக் கோரிக்கை அநாமத்தாகக் கிடக்கிறது. ஆனால் இரண்டு கட்சிகளும் (திமுக – தவெக) 5 வருடங்களுக்கு முன்பு நடந்தது, பத்து வருடங்களுக்கு முன்பு நடந்தது என்பன பற்றியெல்லாம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் மானிக்கக் கோரிக்கை தவிர்த்து வேறு எதுவும் பேசுவதில்லை. ஆனால் அவர்களுக்கு சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு தருவதில்லை. சட்டமன்றத்தில் குழாயடி சண்டை வேண்டாம். நேரலை ஒளிபரப்பு மூலம் எம்எல்ஏக்களின் செயல்பாட்டை தொகுதி மக்கள் பார்க்கின்றனர்.

தங்கள் தொகுதி எம்எல்ஏ பேசுகிறாரா, தூங்குகிறாரா என்பதை மக்கள் அறிய முடிகிறது. நேரலையில் ஒளிபரப்பான பின் நீக்கினாலும், நீக்காவிட்டாலும் ஒன்றுதான். சபாநாயகர் நடுநிலையுடன் செயல்பட்டு அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும்.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

தேவையற்ற பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவைக்கு வெளியே பொதுக்கூட்டங்களில் பேசிக் கொள்ளலாம். சட்டப்பேரவையில் ஒருவரையொருவர் சீண்டுவதன் மூலம் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் திசைதிருப்பக் கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Nepal Flood: நேபாளம் வெள்ளப் பெருக்கு; பீகாருக்கு அச்சுறுத்தல்!| live

நேபாளம் வெள்ளப் பெருக்கால் பீகாருக்கு அச்சுறுத்தல்!அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று...

ரேஷன் அட்டையில் கைரேகை இன்னும் பதியவில்லையா? வருகிற சனிக்கிழமை சூப்பர் வாய்ப்பு!

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா...

தேனி: ஆக்கிரமிப்பு பட்டியலில் பழங்குடி மக்கள்; நீதிமன்றத்தை ஏமாற்றியதாக வனத்துறை மீது குற்றச்சாட்டு?

மேகமலை வருஷநாடு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் கடந்த...

புதிதாக மின் இணைப்பு பெற, இனி வீட்டுக்கு அதிகாரிகள் வரமாட்டார்களா? – ஆகஸ்ட் 28 முதல் புதிய நடைமுறை!

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் அனைத்துத் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்களுக்குச் சுற்றறிக்கை...