25
November, 2026

A News 365Times Venture

25
Wednesday
November, 2026

A News 365Times Venture

“நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனிடம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் விசாரிக்க வேண்டும்" – வாஞ்சிநாதன்

Date:

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நேற்று மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. அப்போது, மாவட்ட ஆட்சியர் கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், சுமதி ஆகியோர் அமர்வில் உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மதியம் சுமார் 1:15 மணிக்கு வழக்கு விசாரணைக்கு ஆஜரானார். 1:30 மணியளவில் உணவு இடைவேளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மாவட்ட ஆட்சியரை தனிப்பட்ட முறையில் அவரின் சேம்பருக்கு அழைத்துப் பேசியிருக்கிறார். இது தொடர்பான விவகாரம் அரசியல் வட்டத்திலும், வழக்கறிஞர்கள் மத்தியிலும் விவாதமாகியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

அப்போது, “நேற்று நாங்கள் நீதிமன்றத்தில் இருந்தபோது, நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. பிற்பகல் 1.30 மணிக்கு உணவு இடைவேளைக்காக நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, மாலை 4 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்துவிட்டுச் சென்றார். அதன் பிறகு 4 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பதை, மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். அதில், விசாரணைக்குப் பிறகு நீதிபதி தன்னைச் சேம்பருக்கு அழைத்து, உத்தரவைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், சேம்பரில் நடைபெற்ற இந்த விவகாரம் குறித்து நீதிபதி தனது உத்தரவில் எதுவும் குறிப்பிடவில்லை. சேம்பருக்கு அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிற்பகல் 3.30 மணிக்குத்தான் தனது முகாம் அலுவலகத்திற்கு வந்ததாக மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 1.30 மணிக்கு நீதிமன்றம் கலைந்த நிலையில், சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் சேம்பரில் மாவட்ட ஆட்சியர் இருந்தாரா? அல்லது சேம்பரில் என்னதான் நடந்தது என்ற கேள்விக்கு விடை இல்லை. நீதிமன்ற விவகாரங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பது நமக்கான வழிகாட்டுதல்.

வாஞ்சிநாதன்

எனவே இந்தச் சம்பவம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனிடம் தலைமை நீதிபதி விளக்கம் கேட்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தீபம் ஏற்றாதது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தத் தேவையான முயற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதே சமயம், கோயில் நிர்வாகம் தேவையான நபர்களை வழங்காதது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"த.வெ.க ஆட்சியைக் கலைச்சிடுங்க…" டெல்லிக்கு பறந்த பா.ஜ.க ரிப்போர்ட்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் விளக்கேற்ற உச்ச நீதிமன்றம்...

“விசுவாசம் என்பது தலைமையை பலவீனப்படுத்துவதில் இல்லை" – கோவை சத்யனைச் சாடும் காயத்ரி ரகுராம்!

அதிமுக-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக்...

திருப்பரங்குன்றம்: `ஏன் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை?'- தவெக அரசிடம் விளக்கம் கேட்கும் ஆளுநர்

திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் தூணில் தீபமேற்ற வேண்டும் என கடந்த...