தேனி மாவட்டச் சிறையிலிருந்து நேற்று இரவு சுமார் 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தச் சம்பவத்தில் தற்போது வரை நான்கு பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள சிறைவாசிகளைத் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தேனி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
“தேனியில் நேற்று 17 கைதிகள் தப்பித்திருக்கின்றனர். சிறையில் இருந்த 3 காவலர்களைக் கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பித்திருக்கின்றனர்.
அவர்களைப் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை நேற்றிரவே தொடங்கியது. இதுவரை 4 கைதிகளைப் பிடித்திருக்கிறார்கள்.
மீதமுள்ளவர்களைப் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மயக்கம் போட்டு நாடகமாடி இருக்கின்றனர். 3 வார்டன்களைக் கடுமையாகத் தாக்கி இருக்கின்றனர்.
டிஜிபியும், ஐஜிபியும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேடுதல் வேட்டை துரிதமாக நடைபெற்று வருகிறது. கேரளா செக் போஸ்ட், வனப் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb




