27
October, 2026

A News 365Times Venture

27
Tuesday
October, 2026

A News 365Times Venture

பிரேசில் தேர்தலில் முறைகேடு? `மோசடியைக் கண்டுபிடிப்பவருக்கு $10 லட்சம் பரிசு' – ட்ரம்ப் அறிவிப்பு!

Date:

பிரேசில் அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரித் தலைவரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, வலதுசாரி வேட்பாளரான ஃப்ளாவியோ போல்சனாரோவை தோற்கடித்து மீண்டும் அதிபராகத் தேர்வாகியுள்ளார். முன்னாள் பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோவின் மகனான ஃப்ளாவியோ போல்சனாரோ, தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்துத் தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய நீதிமன்றத்தை அணுகப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

பிரேசில் அதிபர் லூலா

உச்ச நீதிமன்றம் வாக்குப்பதிவு நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டித்த முடிவை அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும், கூடுதல் நேரத்தில் 35,000 வாக்குகள் (0.03%) மட்டுமே பதிவாகியுள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நான் எந்தப் பக்கமும் ஆதரவு தெரிவிக்கவில்லை, ஆனால் இது மற்றொரு முறைகேடான தேர்தலைப் போலத் தெரிகிறது. மிகவும் மோசமாகக் காட்சியளிக்கிறது.” என்று எந்த ஆதாரத்தையும் குறிப்பிடாமல் விமர்சித்தார்.

மேலும் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “கடந்த காலத் தேர்தல்கள் அல்லது விரைவில் நடைபெறவுள்ள 2026 அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் வாக்காளர் மோசடியில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்குக் தண்டனை பெற்றுத் தருபவர்களுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ8.3 கோடி) பரிசு வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார். ட்ரம்ப்பின் இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள பிரேசில் துணை அதிபர் ஜெரால்டோ ஆல்க்மின், “ட்ரம்ப்பின் கூற்று முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது.” என மறுத்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`கரூர்லயே அவரை முடித்திருக்க வேண்டும் என பேசும் அளவுக்கு.!' – அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரம் மற்றும் முன்னாள்...

தேனி: 17 கைதிகள் தப்பிய விவகாரத்தில் நடந்தது என்ன? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

தேனி மாவட்டச் சிறையிலிருந்து நேற்று இரவு சுமார் 17 கைதிகள் தப்பி...

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டும் குஜராத் மின் உற்பத்தி நிறுவனம்: மகா.வில் வெட்டப்படும் 32,000 மரங்கள்

மகாராஷ்டிராவில் பீவாண்டி உட்பட சில இடங்களில் மின் விநியோகத்தில் ஈடுபட்டு இருக்கும்...

“பணம் கொடுப்பது மட்டும்தான் லஞ்சமா?" – தவெக அரசைச் சாடும் சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவங்கங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்துப்...