27
October, 2026

A News 365Times Venture

27
Tuesday
October, 2026

A News 365Times Venture

அன்பில் கைதும்; முன்னாள் அமைச்சர்களைச் சுற்றும் ஊழல் வளையமும்! – எப்படி எதிர்கொள்ளப் போகிறது திமுக?

Date:

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி பெறப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைதுசெய்திருப்பது உடன்பிறப்புகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கெனவே, நகராட்சி நிர்வாகத்துறையில் கே.என்.நேரு செய்ததாகக் கூறப்படும் பணி நியமன முறைகேடுகள், நெடுஞ்சாலைத்துறையில் சாலைகளே அமைக்காமல் ரூ.3.2 கோடி முறைகேடு செய்ததாக அமைச்சர் எ.வ.வேலு மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் டாஸ்மாக் கொள்முதல், பார் உரிமங்களில் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகள் என திமுக தொடர்ந்து கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது.

அன்பில் மகேஸ்

கைதும், ஊழல் புகார்களும்

இந்நிலையில் அரங்கேறும் கைது நடவடிக்கைகளையும், வலுத்துவரும் ஊழல் புகார்களையும் திமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது? என்ற கேள்வியோடு மூத்த பத்திரிகையாளர் சுவாமிநாதனைத் தொடர்புகொண்டு பேசினோம்.

“தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே, விஜய் அவர்கள் திமுக மீது தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். முக்கியமாக, ‘தொட்டவர்களையும் விடமாட்டேன், தொடுபவர்களையும் விடமாட்டேன்’ என்பது மாதிரியான வசனங்களைத் பேசி வருகிறார்.

இன்னொன்று திமுக ஆட்சிக் காலத்தில் எவ்வளவு கட்சி நிதி (Party Fund) வாங்கினார்கள் என்பதையும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருகிறார். இப்போது 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரப்போகிறது.

அதுதான் திமுக-வுக்கு உண்மையான நெருக்கடி

தனுஷ் போன்ற புதிய முகங்கள் வருவதற்கான அச்சாரம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்; மகளிர் அணி நிர்வாகிகளைச் சந்திப்பது, வெள்ளி விளக்கு பரிசு கொடுப்பது மாதிரியான நகர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

தவெக-வைப் பொறுத்தவரை, ‘திமுகவுக்கு நாங்கள்தான் நேரடி போட்டி’ என்பதை நிலைநிறுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி பொசிஷன் செய்து கொண்டிருக்கும்போது, கட்சி நிதி தொடர்பாக அவர்கள் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு அன்பில் மகேஸ் விவகாரம் பொருத்தமாக அமையும்.

மேலும் இந்தக் கைது நடவடிக்கைகள் அனைத்தையும் விஜய் அவர்கள் நேரடியாகக் களத்திற்குச் சென்று பேசும்போது அதன் வீச்சு வேறொன்றாக இருக்கும், அதுதான் திமுகவுக்கு உண்மையான நெருக்கடியாக இருக்கும்.

முதல்வர் விஜய் vs எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
முதல்வர் விஜய் vs எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

‘கழகம் அவருக்கு துணை நிற்கும்’ என்ற வார்த்தை அதில் இல்லை!

முந்தைய ஜெயலலிதா – கலைஞர் ஆட்சிக் காலத்தில் மாறி மாறி தேர்தல் வழக்குகள் போடுவது, கைது செய்வது போன்றவை நடந்திருக்கின்றன. ஆனால், அதிலிருந்து இது ஏன் தனித்துவமானது என்றால், இப்போது அரசியல் சூழலே மாறியிருக்கின்றது. அதனால்தான் இது திமுக-வுக்குப் பெரிய நெருக்கடியாக முக்கியத்துவம் பெறுகிறது.

‘இவரும் ஊழல்வாதிதான்’ என்று தனிநபராகப் பேசாமல், ‘ஊழல் கட்சி’ என திமுக-வை நோக்கி விஜய் ஃபிரேம் செய்கிறார். அதை எதிர்கொள்வது திமுக-வுக்குப் பெரிய சவாலாக இருக்கும்.

நேற்று அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டபோது மு.க.ஸ்டாலின் வெளியிட்ட கண்டன அறிக்கையில் ‘அன்பில் மகேஸ் இதனைச் சட்டப்படி எதிர்கொள்வார்’ என்ற வார்த்தைதான் இருக்கிறதே தவிர, ‘கழகம் அவருக்குப் பின்னால் துணை நிற்கும்’ என்ற வார்த்தை இல்லை.

பொய்யான கற்பிதங்களை உடைக்க வேண்டிய நெருக்கடி.!

நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவது திமுக வழக்கறிஞர்கள் பிரிவுதான் என்றாலும், முதன்மைப் பார்வையில் திமுக முன்னுக்கு வர விரும்பவில்லை. அவர்கள் பாதுகாப்பாக ஆட்டம் ஆடுகிறார்கள்.

ஏனென்றால், மக்கள் மத்தியில் ‘ஊழலுக்கு திமுக துணையாக நிற்கிறது’ என்ற பெயர் வந்துவிடக் கூடாது, அதேசமயம் இது இன்னும் நீதிமன்றத்தில் ஊழல் என்று நிரூபிக்கப்படவும் இல்லை.

ஆனால் இடைத்தேர்தலில் விஜய் போகும்போது, ‘என் முன்னாடி 3 ஃபைல் இருந்தது’ என்று சொன்னதுபோல, ‘ஊழல்’ மற்றும் ‘கட்சி நிதி’ என்று இவர்கள் சொன்ன இரண்டு விஷயங்களும் பொய்யான கற்பிதங்கள் என்பதை உடைக்க வேண்டிய நெருக்கடி திமுக-வுக்கு வருகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

இந்த டோனை திமுக எடுக்கும்?

அதை எதிர்கொள்ள திமுக-வினர் களத்தைக் கூர்மைப்படுத்துவார்கள். சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை இன்னும் வீரியமாகப் பேசுவார்கள். தவிர திமுக இதற்கு எப்படிப் பதிலடி கொடுக்கும் என்றால், ‘முந்தைய அதிமுக ஆட்சியில் கரூர் விஜயபாஸ்கர், விராலிமலை விஜயபாஸ்கர் போன்றவர்கள் மீது வழக்குகள் இருந்தபோதே அவர்களைக் கட்சியில் சேர்த்தீர்களே’ என்ற டோனை எடுத்துப் பேசுவார்கள். அந்த டோன் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும்

‘நீங்களும் ஊழல்வாதிகளைச் சேர்த்துக்கொண்டு, ஊழல் ஒழிப்பு பற்றிப் பேசுவது சரியில்லை’ என்று தவெக மீது குற்றம் சுமத்துவார்கள். அது தவெக-வுக்குக் கொஞ்சம் நெருக்கடியைத் தரலாம்.

ஆனால் அன்பில் மகேஸ் கைது நடவடிக்கை என்பது மாவட்ட அளவிலான இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும்.

 ஸ்டாலின் - விஜய்
ஸ்டாலின் – விஜய்

கைது நடவடிக்கைகள் விஜய்க்கு பெரிய வாய்ப்பாக அமையும். வழக்கமாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 17-வது பிரிவின்படி, முன்னாள் அமைச்சர்களைக் கைதுசெய்ய ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் ஆளுநர் அனுமதிகூடப் பெறாமல் ஒரு கைது நடவடிக்கை எடுக்கப்படும்போது, அதை திமுக-வால் பொதுவெளியில் பேச முடியாமல் நீதிமன்றத்தில் மட்டுமே பேச முடிகிறது.

எனவே, இந்த ‘ஊழல்’ என்ற வாதத்திற்குள் இதைச் சுருக்குவதால் திமுக-வுக்குப் பெரிய நெருக்கடி உருவாகும். வரவிருக்கும் இடைத்தேர்தல் களங்களில் விஜய் நேரடியாக இறங்கி திமுக-வுக்கு எதிராக வீரியமாகப் பேசுவதற்கு இந்தக் கைது நடவடிக்கைகள் பெரிய வாய்ப்பாக அமையும்” என்று விளக்கினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

விழுப்புரம்: செஞ்சி சிறுமி மாயமான விவகாரம் – மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கும் காவல்துறை!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி...

`சிலையும் இல்லை நினைவு மண்டபமும் இல்லை!'- மருது சகோதரர்கள் பிறந்த என்.முக்குளம் கிராமத்தினர் ஆதங்கம்

ஆங்கிலேய ஏகாதிபத்திய அதிகாரத்தை எதிர்த்து வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஜம்புத்தீவு பிரகடனத்தை’ வெளியிட்டு,...

`எட்டு தலித் அமைச்சர்கள் வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடுமா..?’ – அமைச்சர் வன்னி அரசு

கோவையில் சாதியப் பாகுபாடு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவர் அகிலனின் இல்லத்திற்கு...

DPDP: `பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குறியாகும்'- வழக்கு தொடர்ந்த 21 செய்தி நிறுவனங்கள்; விவரம் என்ன?

டிஜிட்டல் செய்தி இணையதளங்களின் செயல்பாடுகளுக்கும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கும் மத்திய அரசின் தனிநபர்...