27
October, 2026

A News 365Times Venture

27
Tuesday
October, 2026

A News 365Times Venture

`சிலையும் இல்லை நினைவு மண்டபமும் இல்லை!'- மருது சகோதரர்கள் பிறந்த என்.முக்குளம் கிராமத்தினர் ஆதங்கம்

Date:

ஆங்கிலேய ஏகாதிபத்திய அதிகாரத்தை எதிர்த்து வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஜம்புத்தீவு பிரகடனத்தை’ வெளியிட்டு, இந்த மண்ணின் சுதந்திரத்துக்காகத் தங்கள் கடைசி மூச்சு வரை போராடி உயிர் நீத்தவர்கள் மன்னர்கள் மருது சகோதரர்கள்.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் 24 ஆம் தேதி அன்று சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தமிழக அரசு சார்பிலும், 27-ஆம் தேதி சமுதாயத் தலைவர்கள் சார்பில் காளையார்கோவிலிலும் இவர்களது குருபூஜை விழாக்கள் தமிழகம் முழுவதும் பெரும் ஆரவாரத்துடன் களைகட்டுகின்றன. ஆனால், இந்த ஆரவாரங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் கசப்பான உண்மைதான் வரலாற்று ஆர்வலர்களையும் மருது சகோதரர்கள் பிறந்த என்.முக்குளம் கிராமத்தினரையும் வேதனையில் ஆழ்த்துகிறது.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகிலுள்ள என்.முக்குளம் கிராமமே மருது சகோதரர்களான பெரிய மருது மற்றும் சின்ன மருதுவின் பூர்விகச் சொந்த ஊர். தென்னிந்திய பாளையக்காரர்கள் கூட்டமைப்பை உருவாக்கி ஆங்கிலேயருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய இவர்கள் 1801 அக்டோபர் 24 அன்று திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.

விடுதலைப் போராட்டத் தியாகிகளான மருது சகோதரர்களுக்குத் திருப்பத்தூரில் அரசு சார்பில் மணிமண்டபமும் முழு உருவ வெண்கலச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மதுரை தெப்பக்குளம், திருமங்கலம் போன்ற இடங்களில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால், இவ்வளவு சிறப்புகளுக்குரிய மருது சகோதரர்கள் பிறந்த சொந்த ஊரான என்.முக்குளத்தில் நினைவுத் தூண், சிலை, நினைவு மண்டபம் என எந்தவொரு நினைவுச் சின்னமும் இதுவரை அரசால் உருவாக்கப்படவில்லை.

மருது சகோதரர்கள்

மருது பாண்டியர்கள் வாழ்ந்த அந்த ஓட்டு வீடு தற்போது மண் மேடிட்டு, புல் மண்டிக் கிடக்கும் பரிதாப நிலையை நேரில் கண்டு ஆய்வறிக்கை வெளியிட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரீப், “ஆங்கிலேயருக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்கிய வரலாற்றுப் பெருமை கொண்ட மருதுபாண்டியர்களின் பூர்வீக வீட்டைத் தமிழக அரசு உடனடியாக நினைவு மண்டபமாக மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து நம்மிடம் பேசிய மருதுபாண்டியர்களின் வாரிசுதாரர்களில் ஒருவரான முத்துப்பாண்டி, “2010-ல் வாரிசுதாரர்களும் கிராம மக்களும் சேர்ந்து சொந்த நிதியில் முக்குளத்தில் நினைவு மணிமண்டபம் கட்ட முயன்றோம். ஆனால், அரசின் முறையான அனுமதியும் நிதியும் இல்லாததாலும், சட்டப் பூர்வமான சிக்கல்களாலும் அப்பணிகள் பாதியிலேயே நின்றுவிட்டன. தற்போதைய த.வெ.க அரசாவது முக்குளம் கிராமத்தில் புதிய நினைவு மண்டபத்தை அமைக்க வேண்டும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

விழுப்புரம்: செஞ்சி சிறுமி மாயமான விவகாரம் – மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கும் காவல்துறை!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி...

`எட்டு தலித் அமைச்சர்கள் வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடுமா..?’ – அமைச்சர் வன்னி அரசு

கோவையில் சாதியப் பாகுபாடு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவர் அகிலனின் இல்லத்திற்கு...

DPDP: `பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குறியாகும்'- வழக்கு தொடர்ந்த 21 செய்தி நிறுவனங்கள்; விவரம் என்ன?

டிஜிட்டல் செய்தி இணையதளங்களின் செயல்பாடுகளுக்கும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கும் மத்திய அரசின் தனிநபர்...

“ஒரே நாளில் 17 கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் செல்லும் அவலநிலை நிலவுகிறது” – கனிமொழி சாடல்!

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர்...