25
August, 2026

A News 365Times Venture

25
Tuesday
August, 2026

A News 365Times Venture

தென்காசி: அரசு அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட முன்னாள் முதல்வர் புகைப்படம்; அதிமுக-வினர் கண்டனம்!

Date:

தென்காசி நகரப் பகுதியில் புது பஸ்டாண்ட் செல்லும் வழியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் முன்னாள், இந்நாள் தமிழக முதல்வர்களின் போட்டோக்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் போட்டோவை அடையாளம் தெரியாத யாரோ சிலர் கோட்டாட்சியர் அலுவலக குப்பையில் போட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களுள் சிலர், குப்பையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போட்டோ கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோட்டாட்சியர் அலுவலகம்

இதனால் ஏற்பட்ட மனப்பொருமலில், தமிழகத்தின் முன்னாள் முதல்வருக்கே இந்த நிலைமையா? இறந்தவர்களுக்கான மதிப்பும், மரியாதையும் இவ்வளவுதானா? என அங்கிருந்த வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கிடையே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாக குப்பையில் கிடந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், இது குறித்து தகவலறிந்த தென்காசி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ஊழியர்களை வைத்தே, குப்பையில் வீசப்பட்டு கிடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை மீண்டும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச்செல்ல வைத்தனர்.

அதிகாரிகள்

இருந்தபோதும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை குப்பையில் போட்ட அதிகாரிகள் யார்? அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்மாவட்ட அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கண்டன குரல்கள் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'தவெக எம்.எல்.ஏ சொன்ன வார்த்தை; அடிக்க பாய்ந்த திமுக எம்.எல்.ஏக்கள்?' – அவையில் கடும் அமளி!

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில்...

"சேகர் பாபு மீது எனக்கு கோபம் இல்லை; ஆனால் வருத்தம்…" – என்ன சொல்கிறார் உதயநிதி?

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும்...

விஜயகாந்த் பிறந்தநாள்: "மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவரின் புகழ் நிலைத்தோங்கட்டும்" – முதல்வர் விஜய்

தேமுதிக நிறுவனரும், நடிகருமான மறைந்த விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது....

"அது நான்தான்; அமைச்சர் கீர்த்தனா இல்ல" – மலேசியா பெண் வெளியிட்ட விளக்க வீடியோ

சமீபத்தில் காரில் இருந்து ஒரு பெண் இறங்குவது போன்ற வீடியோ சமூக...