26
August, 2026

A News 365Times Venture

26
Wednesday
August, 2026

A News 365Times Venture

"சேகர் பாபு மீது எனக்கு கோபம் இல்லை; ஆனால் வருத்தம்…" – என்ன சொல்கிறார் உதயநிதி?

Date:

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட்.24) சென்னையில் நடைபெற்றது.

இதில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், “இன்றைக்கு ஆளும் கட்சியாக வந்திருக்கக் கூடியவர்கள் எப்படி இந்த நிலைமைக்கு வந்தார்கள் என்று நாம் நினைத்து பார்க்க வேண்டும்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

தேர்தலில் நாம் எதிர்பார்த்தது மிகப்பெரிய வெற்றி. மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி வரும் என ஒரு நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் என்ன பண்ணிவிட்டோம்…

தேர்தலில் எதிரி யார் என்று தெரியாமல் சண்டை போட்டுவிட்டோம். இன்றைக்கு யார் எதிரி என்று தெரிந்துவிட்டது. இதனால் மீண்டும் அந்தத் தவறை நம்ம செய்ய மாட்டோம். இந்தக் கிழக்கு மாவட்டத்தில் மாதம் ஒரு நிகழ்ச்சியில் நான் வந்து கலந்துகொண்டு இருக்கிறேன்.

ஆனால் ஒரு சிறிய இடைவேளை.. 4 மாதங்களுக்குப் பிறகு இந்தச் சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு வந்து இருக்கிறேன். சேகர்பாபு அவர்கள் நினைத்து இருக்கலாம்.

நான் அவர் மீது கோபத்தில் இருக்கிறேன். அதனால்தான் நான் வரவில்லை என்று… அது கோபம் இல்லை, வருத்தம். வருத்தம் மட்டும் இல்லை. அவர் மீதும் இந்த மாவட்டம் மீதும் எனக்கு இருக்கக்கூடிய உரிமை.

 சேகர்பாபு
சேகர்பாபு

சினிமா மாயை, கவர்ச்சி, இளம் தலைமுறையினர் சோஷியல் மீடியாக்களில் முழுக்க முழுக்க கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, திராவிட மாடல் அரசின் திட்டங்கள், நம் தலைவர் அவர்களின் சாதனைகள் எல்லாம் இளம் தலைமுறையினர் இடையே போய் சேரவில்லை என எத்தனையோ காரணங்களை நாம் சொல்லி நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ளலாம்.

இருப்பினும் கொளத்தூர் தோல்வியை ஏற்க முடியுமா? இது நமக்கு ஒரு பெரிய பாடம். 108 இடங்களில் தவெக வென்றது. நம் தயவில்தான் அவர்கள் ஆட்சியில் உள்ளார்கள்.

மாற்றம் மாற்றம் என்று சொல்லி ஏமாற்றம்தான் செய்கிறார்கள். திமுக மக்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட கட்சி. இந்தத் தோல்வியை எல்லாம் பார்த்து பயப்படாது” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தேனி: ஆக்கிரமிப்பு பட்டியலில் பழங்குடி மக்கள்; நீதிமன்றத்தை ஏமாற்றியதாக வனத்துறை மீது குற்றச்சாட்டு?

மேகமலை வருஷநாடு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் கடந்த...

புதிதாக மின் இணைப்பு பெற, இனி வீட்டுக்கு அதிகாரிகள் வரமாட்டார்களா? – ஆகஸ்ட் 28 முதல் புதிய நடைமுறை!

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் அனைத்துத் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்களுக்குச் சுற்றறிக்கை...

"சோஃபா செட் இல்ல, லாக்கரே வந்தாலும்கூட தேமுதிக தன்னுடைய..!"- கூட்டணி மாறுவது குறித்து பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று (ஆகஸ்ட். 25) கடலூரில் நடைபெற்ற...

பரந்தூர் : வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான விவாதம்! தமிழகத்துக்கு லாபமா, நஷ்டமா?

சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் தொடக்கம்...