25
August, 2026

A News 365Times Venture

25
Tuesday
August, 2026

A News 365Times Venture

'தவெக எம்.எல்.ஏ சொன்ன வார்த்தை; அடிக்க பாய்ந்த திமுக எம்.எல்.ஏக்கள்?' – அவையில் கடும் அமளி!

Date:

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் தவெக எம்.எல்.ஏ மதார் முஸ்தபா திமுகவை விமர்சிக்கையில் ஒரு வார்த்தையை பயன்படுத்த, திமுக எம்.எல்.ஏக்கள் அதற்காக கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மதார் முஸ்தபா பேசுகையில் தவெகவையும் முதல்வர் விஜய்யையும் புகழ்ந்து பேசிவிட்டு, திமுகவை விமர்சிக்கையில் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு வார்த்தையை பயன்படுத்தினார். சபாநாயகர் அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார்.

அந்த வார்த்தைக்கு ஆட்சேபனை தெரிவித்த திமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேசிய அமைச்சர் பர்வேஸ், தாஹிரா எம்.எல்.ஏ போன்றோரும் அதே விஷயத்தை குறிப்பிட்டு திமுகவை விமர்சிக்க, திமுக எம்.எல்.ஏக்கள் இன்னும் கடுப்பாகினர். அதனால் அவையின் முன்பக்கம் வந்து அமளியில் ஈடுபட்டனர்.

உடனே எழுந்த அமைச்சர் ராஜ்மோகன், ‘ வசந்தம் கார்த்திகேயனும் பூண்டி கலைவாணனும் அடிக்க பாய்கிறார்கள்’ எனக் குற்றஞ்சாட்டினார். திமுக சார்பில் எ.வ.வேலுவும் தமீமுன் அன்சாரியும் அவர்களை சமாதானப்படுத்தி உட்கார வைத்தனர். பூண்டி கலைவாணன் மட்டும் சபாநாயகரின் இருக்கைக்கே சென்று முறையிட்டுவிட்டு வந்தார்.

திமுக சார்பில் எழுந்து பேசிய கோவி செழியனும் தமீமுன் அன்சாரியும் ‘அவையில் பேசும் விஷயங்கள் வெளியில் அமைதியை குலைத்துவிடக் கூடாது’ என எடுத்துக் கூறி நிலைமையை சரிப்படுத்தினார்.

இதன்பின்னரும் மதார் கண்ணீர் விட்டு சில ஆவேசமான கருத்துகளை பகிர, சபாநாயகர் அதைப் பற்றி பேச வேண்டாம் என கறாராக கூறினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"சேகர் பாபு மீது எனக்கு கோபம் இல்லை; ஆனால் வருத்தம்…" – என்ன சொல்கிறார் உதயநிதி?

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும்...

விஜயகாந்த் பிறந்தநாள்: "மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவரின் புகழ் நிலைத்தோங்கட்டும்" – முதல்வர் விஜய்

தேமுதிக நிறுவனரும், நடிகருமான மறைந்த விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது....

"அது நான்தான்; அமைச்சர் கீர்த்தனா இல்ல" – மலேசியா பெண் வெளியிட்ட விளக்க வீடியோ

சமீபத்தில் காரில் இருந்து ஒரு பெண் இறங்குவது போன்ற வீடியோ சமூக...

TN Assembly: `கர்நாடகாவில் கொல்லப்பட்ட மூன்று தமிழர்களுக்காக தமிழக அரசு என்ன செய்திருக்கிறது?' – உதயநிதி கேள்வி | Live

சட்டமன்றத்தில் உதயநிதி பேச்சுசட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "கர்நாடக...