14
June, 2026

A News 365Times Venture

14
Sunday
June, 2026

A News 365Times Venture

"தன் மகனை அரசியலுக்குள் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி டிராமா செய்கிறார்" – சி.வி.சண்முகம் தாக்கு

Date:

அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் இன்று (ஜூன்.14) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

”அதிமுகவின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

அதிமுகவின் தோல்விக்கான காரணத்தை தொண்டர்கள் வரை உணர்ந்துள்ளனர். ஆனால் இபிஎஸ் உணரவில்லை.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர் தோல்வி கிடைத்துள்ளது.

சீட்டுக்கட்டுகளைப் போல அதிமுக சரிந்து கொண்டிருக்கிறது. கேள்வி எழுப்பியதற்காகத் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தில், தற்போது யாரும் கேள்வி கேட்க முடியாத நிலை உள்ளது.

தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் ஆமாம் சாமி போடுபவர்கள் மட்டுமே உள்ளனர்.

குடும்பத்தார் மற்றும் பணம் கொடுப்பவர்களின் பேச்சை மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி கேட்கிறார்.

கட்சிக்காக உழைத்தவர்கள், பணத்தைச் செலவு செய்தவர்கள் வேதனையுடன் வெளியேறுகின்றனர்.

வேதனையுடன் கட்சியில் இருந்து வெளியேறுபவர்களை துரோகிகள் என்பதா? அதிமுக தலைமை சர்வாதிகாரப்போக்குடன் நடந்துகொண்டது.

திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று திட்டமிட்டப்போதே அதிமுக தனது சுயத்தை இழந்துவிட்டது.

திமுகவில் இருந்து எம்ஜிஆர் விலகியதால் அவர் துரோகி ஆகிவிட்டாரா? பாமக கூட்டணி இல்லையென்றால் தேர்தலில் 7, 8 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்று இருக்கும்.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், விஜய்
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, மக்களால் புறக்கணிக்கப்பட்டு விட்டது.

தொண்டர்களால் உருவான இயக்கம், தற்போது ஒரு குடும்பத்தின் பிடிக்குள் அதிமுக சென்று கொண்டிருக்கிறது.

தனது மகனை அரசியலுக்குள் கொண்டுவருவதற்கு எடப்பாடி டிராமா செய்து கொண்டிருக்கிறார். கனவுலகத்தில் இருந்து இபிஎஸ் முதலில் வெளியே வரவேண்டும்.

கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை கூட்ட அஞ்சுவது ஏன்? செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டவில்லை என்றால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும்” என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

முதல்வர் பாணியில் ஆபீஸில் மதிய சாப்பாடு; பவானிசாகர் எம்எல்ஏ ரீல்ஸ்! எதிர்க்கட்சியினர் சொல்வதென்ன?

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியின் த.வெ.க வேட்பாளராகப் போட்டியிட்டவர் தமிழ்ச்செல்வி. தனக்கு...

புதுக்கோட்டை: கடன்கள், ஏறும் டீசல் விலை… 60 நாட்களுக்குப் பிறகு பாயக் காத்திருக்கும் படகுகள்

"ஆழ்கடல் மீன்பிடி தடைக்காலம் முடிஞ்சாச்சு. இனி எப்படியாவது கடலுக்குப் போய் நம்ம...

“பாஜகவுக்கு ஆதரவாக ராகுல் காந்தி; மோடியைத்தான் கட்டிப்பிடிப்பார்" – பினராயி விஜயன் விமர்சனம்

ஜூன் 8 - அன்று 'இந்தியா' (INDIA) கூட்டணியின் தலைவர்கள் சந்தித்து...

'அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகிறது?' – ட்ரம்ப் சொல்வது என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போரை நிறுத்த தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று...