16
June, 2026

A News 365Times Venture

16
Tuesday
June, 2026

A News 365Times Venture

சுட்டிக் காட்டிய ஜூ.வி… ஆக்சனில் இறங்கிய அமைச்சர்… வைகை அணை தூர்வாருவது குறித்து ஆய்வு

Date:

மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதரமாக இருப்பது வைகை அணை.

அதோடு வைகை அணையிலிருந்து வரும் நீரை வைத்தே இந்த மாவட்டங்களிலெல்லாம் விவசாயம் நடைப்பெற்று வருகிறது. சுமார் 68 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணையின் நீர் மட்டம் 20 அடிக்கும் கீழ் சென்றது, இதனால் மதுரை, தேனி மாவட்டங்களில் தண்ணீருக்காக எடுக்கும் நீரின் அளவு குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இது குறித்து 14/06/2026 தேதியிட்ட ‘ஜுனியர் விகடன்’ இதழில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அதில் வைகை அணையில் 20 அடிக்கு வண்டல் மண் மற்றும் மணல் இருக்கிறது.

இதனால் அணையின் அடி மட்டம் சேரும், சகதியாக இருக்கிறது. இந்தக் காரணங்களால் நீர் கலங்கலாக இருப்பதோடு நீரைத் தேக்கி வைப்பதிலும் சிக்கல் இருக்கிறது; வைகை அணையைத் தூர்வார வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்களின் பேட்டிகளுடன் கட்டுரை வெளியிட்டு  இருந்தோம்.

ஜூ.வி. இதழ் வெளியான நான்காவது நாளான நேற்று வைகை அணைய தூர்வாருவது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதனுடன் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர், நிர்மல்குமார்.

வைகை அணை

ஆய்வு செய்து விட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், ”வைகை அணையில் தூர்வாரும் பணிகள் குறித்து தற்போது வரை ஆய்வு நடத்திக் கொண்டு வருகிறோம்.

இதற்காக மத்திய அரசிடம் ஒப்புதலைக் கேட்டு சில நாள்களுக்கு முன்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது ஒப்புதல் கிடைத்தவுடன்  தூர்வாரும் பணிகள் துவங்கப்படும்.

மூன்று கட்டங்களாகத் தூர்வாரும் பணிகள் மேற்கொண்டால் கூட முடிவு பெற 9 வருடம் ஆகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதற்கு முன்பாகப் பணிகளை முடிப்பதற்குத் திட்டமிடக் கூறியிருக்கிறோம். வைகை அணையில் மணல் மேடுகளால் 20% நீர் தேக்க முடியாத சூழல் தற்போது உள்ளது. அதை நிவர்த்தி செய்யும் பணிகளில் மேற்கொள்ள உள்ளோம்.

70 ஆண்டுகளாக வைகை அணையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளப்படவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. விவசாயிகள் அல்லாத தனிநபர்கள் வண்டல் மண் எடுப்பது குறித்து அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். அது குறித்து தகவல் கிடைத்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அமைச்சர் ஆய்வு
அமைச்சர் ஆய்வு

மேகமலை வனப்பகுதிகளில் பல நூறு ஆண்டுகளாக வசித்து வரும் மலைவாழ் மக்களை வனத்துறை வெளியேற்றுவது குறித்த கேள்விக்கு, ‘’இயற்கை வளங்களைத் தொந்தரவு செய்யாமல் மலைவாழ் மக்களள் அவர்கள் இருக்கும் இடத்தில் வசிக்கலாம். அதே போல் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும்  ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?'- முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்...

கோயிலில் வைத்து மருத்துவம்; பூட்டி கிடக்கும் சுகாதார நிலையம் – அலட்சியத்தில் கூத்தாநல்லூர் நகராட்சி!

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் அருகே பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையின்...

`மண்ணை மலடாக்க துடிக்கிறார்கள்!' – ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகக் கொதிக்கும் கடலூர் மக்கள்

கடல் இயற்கை வளங்களை அழிக்கும் திட்டம்கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து...