23
June, 2026

A News 365Times Venture

23
Tuesday
June, 2026

A News 365Times Venture

'தண்ணீர் பாட்டிலா… டம்ளரா… எதை தூக்கி வீசலாம்?' – மாறி மாறி கலாய்த்த பிரேமலதா – ஓ.பி.எஸ்!

Date:

ஆளுநர் உரையின் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதாவும் திமுக எம்.எல்.ஏ ஓ.பி.எஸ்ஸூம் மாறி மாறி கிண்டலாக பேசிக் கொண்ட சம்பவம் அவையில் கலகலப்பூட்டியது.

பிரேமலதா விஜயகாந்த்

ஆளுநர் உரையின் மீது பேச எழுந்த பிரேமலதா முதலில், ‘உங்கள் அண்ணன் கேப்டன் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்றார். தொடர்ந்து பேசியவர், ‘அவையில் உறுப்பினர்களுக்கு டம்ளரில் தண்ணீர் வைப்பதால் மீண்டும் மீண்டும் தண்ணீரை நிரப்ப அவை ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். நமக்கே சங்கடமாக இருக்கிறது. அதனால் அவை உறுப்பினர்களுக்கு இடத்தில் தண்ணீர் பாட்டில் வைக்க வேண்டும்’

உடனடியாக எழுந்த திமுக எம்.எல்.ஏ ஓ.பி.எஸ், ‘கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை தூக்கி அடித்து விடுவார்கள்’ என்றார். அவையில் சிரிப்பலை எழவே, ‘வன்முறையாக தூக்கி அடிப்பதாக இருந்தால் டம்ளரை கூட தூக்கி அடிக்கலாம் (நகைச்சுவையாக…)’ என பிரேமலதா கூறினார். குறுக்கிட்ட பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு, ‘இது ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த வாழ்க்கை அனுபவமா என்று அறிய விரும்புகிறேன்’ என்று கமென்ட் அடித்தார்.

ஓ.பி.எஸ் - ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பி.எஸ் – ஓ.பன்னீர்செல்வம்

இந்த உரையாடல் முதல்வர் உட்பட அவையில் உள்ள அத்தனை உறுப்பினர்களையும் கலகலப்பூட்டியது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மேற்கு வங்கம்: கட்சித் தலைவர் பதவியிலிருந்து மம்தா பானர்ஜி நீக்கம்!? – TMC பரபரப்பு நகர்வு

2026 தேர்தல் எதிரொலிமேற்கு வங்கத்தில் மூன்று முறை முதல்வராக இருந்தவர் மம்தா...

"பர்னிச்சர் பிசினஸ் எல்லாம் வெளியே பண்ணுங்க; இங்க வேணாம்" – சோஃபா மாடல் விமர்சனத்துக்கு விஜய் பதிலடி

சட்டமன்றக் கூட்டத்தொடர் நான்காவது நாளாக இன்று (ஜூன்.23) நடைப்பெற்று வருகிறது....

முதல்வர் உரை: “10 Reels-க்கான கண்டென்ட்; இனி சட்டமன்றத்துல டான்ஸ் ஆடுவாங்க போல" – உதயநிதி விமர்சனம்

சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து முடிந்திருக்கும் நிலையில், அவையில் முதல்வர் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே...

"'ஈவில்ஸ், ஈவில்ஸ்'ன்னு டெவில்ஸ் எங்களைப் பார்த்து சொல்றாங்க; ஆனா…" – ஆக்ஷனோடு உரையை முடித்த விஜய்

சட்டமன்றக் கூட்டத்தொடர் நான்காவது நாளாக இன்று (ஜூன்.23) நடைப்பெற்றது. கூட்டத்தொடரில்...