23
June, 2026

A News 365Times Venture

23
Tuesday
June, 2026

A News 365Times Venture

பிரேமலதா வைத்த கோரிக்கை; ஓபிஎஸ் சொன்ன பதில்; சட்டமன்றத்தில் கலகல; என்ன நடந்தது?

Date:

சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், “முதல்வர் விஜய்க்கு உங்கள் அண்ணன் கேப்டன் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள். சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடபட்டது வரவேற்கதக்கது.

அதேபோல சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கு பேச சம வாய்ப்பு தர வேண்டும். ஆனால் ஆளுநர் உரை ஆளுங்கட்சி உரை போல் இருந்தது. அவரின் உரையில் அத்தனை பிழைகள் இருந்தன. அவரது உரையில் தமிழில் 37 பிழைகள் இருந்தன” என்று கூறினார்.

சட்டமன்றம்

அப்போது பேசிய சபாநாயகர், “வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஆளுநர் தமிழை உச்சரிக்க முயன்றதையே நாம் பாராட்ட வேண்டும். ஆளுநர் தமிழைக் கற்றுக்கொள்ள ஆர்வமாகத்தான் இருக்கிறார்” என்றார்.

தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “உறுப்பினர்கள் இருக்கையில் க்ளாஸில் தண்ணீர் வைப்பதற்குப் பதிலாக தண்ணீர் பாட்டில் வைக்க வேண்டும்” என்றார். அதற்கு ஓபிஎஸ், “அண்ணியார் நல்ல கருத்தைச் சொல்லியிருந்தாலும் அந்தக் கருத்து ஏற்புடையது அல்ல. சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை எறிவதற்கு வாய்ப்பு இருக்கிறது” எனக் கூறினார். அப்போது சட்டமன்றத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.

பேச்சைத் தொடர்ந்த பிரேமலதா, “உறுதியாக காவிரி விவகாரத்திலும், மேகதாது விவகாரத்தில் யாரும் நம் உரிமையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. நேற்று கருப்பு தினமாக இருந்தது. அமோனியா தாக்குதலால் இவ்வளவு பேர் தமிழகத்தில் பாதித்தது இது முதல் முறை.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

அவர்களை நேரில் பார்க்கும்போது கண், காதுகளில் இருந்து ரத்தம் வந்தது. ஒரு பெண்ணாக அந்தப் பெண்களைப் பார்க்கும்போது கஷ்டமாக இருந்தது. அனைவரும் அவர்களுக்காக இறைவனை வேண்டிக்கொள்வோம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`இணைந்தும், இணையாமலும்.!' – வெளிநடப்பு செய்த அதிமுகவினர்; உள்ளே வேலுமணி – வெளியே எடப்பாடி!

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது....

ஈரோடு: தூய்மைப் பணியைத் தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவு – போராட்டத்தில் இறங்கிய பணியாளர்கள்!

தமிழ்நாட்டில் உள்ள சில மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை முழுமையாகத் தனியார் வசம்...

'தண்ணீர் பாட்டிலா… டம்ளரா… எதை தூக்கி வீசலாம்?' – மாறி மாறி கலாய்த்த பிரேமலதா – ஓ.பி.எஸ்!

ஆளுநர் உரையின் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் தேமுதிக...

`எங்க திட்டத்தில ஸ்டிக்கர் ஒட்டிக்குறாங்க; ஆளுங்கட்சிக்கே பவர் இல்ல'னு பேசிக்குறாங்க' – உதயநிதி உரை

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை...